logo
ஈரோட்டில் 30 பணியாளர்களுடன் ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு மையம் திறப்பு

ஈரோட்டில் 30 பணியாளர்களுடன் ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு மையம் திறப்பு

18/May/2021 07:03:55

 

ஈரோடு, மே:ஈரோட்டில் 30 பணியாளர்களுடன் ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு மையம் திறக்கப்பட்ட  8 மணி நேரத்தில் 329 தொலைபேசி அழைப்புகள்.

ஈரோட்டில் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த வீட்டு வசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி, மாவட்ட ஆட்சியர் சி. கதிரவன் ஆகியோர் பல்வேறு இடங்களில் சென்று ஆய்வு செய்து வருகின்றனர்.

கொரோனா பாதிப்பு ஏற்பட்டால் சிகிச்சைக்கான படுக்கை வசதிகள், ஆக்சிஜன் குறித்த விவரங்கள், முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டம் தொடர்பான சந்தேகங்களை  பொதுமக்கள் தெரிந்து கொள்வதற்காக 24 மணி நேரம் செயல்படக்கூடிய ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு மையம் அமைக்க முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் 24 மணி நேரமும் இயங்கக்கூடிய ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு மையம் திறக்கப்பட்டது. மாநகராட்சி ஆணையர். மா. இளங்கோவன்மாவட்ட வருவாய் அலுவலர்  முருகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

வீட்டு வசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி  கலந்து கொண்டு ஒருங்கிணைந்த கட்டுப்பாடு மையத்தை திறந்து வைத்தார். பின்னர் அமைச்சர்  கூறியதாவது:

ஈரோடு மாநகரம் மற்றும் மாவட்டத்திற்கு 24 மணி நேரமும் இயங்கும் ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு மையம் தொடங்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் கொரோனா நோய்தொற்று தொடர்பாக மருத்துவ ஆலோசனை, அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் உள்ள படுக்கை வசதிகள் குறித்த விவரங்கள்.

ஆக்சிஜன் தேவைகள் குறித்த விவரங்கள் மற்றும் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டம் தொடர்பான சந்தேகங்களுக்கு தொடர்பு கொள்ளலாம். 8056931110, 8754731110, 8220671110, 8870361110, 8220791110, 8870541110, 8754231110, 8870581110, 8754381110, 8870691110  ஆகிய எண்ணிகளில் தொடர்பு கொள்ளலாம் என்றார் அமைச்சர் முத்துசாமி.

 திறந்த 8 மணி நேரத்தில் கட்டுப்பாட்டு அறைக்கு வந்த 329 அழைப்புகள்:

ஈரோடு மாநகராட்சி ஆணையர் மா. இளங்கோவன் கூறியதாவது: மாநகராட்சி அலுவலகத்தில்  காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு மையத்திற்கு மொத்தம் 329 அழைப்புகள் வந்துள்ளது.   இங்கு ஒரு தாசில்தார், ஒரு டாக்டர் ,  2  மனநல நிபுணர்கள், அறக்கட்டளை சேவகர்கள் ஆகியோர் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் பணியாற்றுவார்கள்.

காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை இந்த ஒருங்கிணைந்த கட்டுப்பாடு மையத்திற்கு மாவட்டம் முழுவதிலும் இருந்து 329 போன் அழைப்புகள் வந்துள்ளது. இதில் பெரும்பாலானவை கொரோனா ஆக்சிஜன் சிகிச்சை குறித்தும், முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீடு குறித்தும், தடுப்பூசி போட்டுக் கொள்வது, கொரோனா பரிசோதனை செய்து கொள்வது போன்ற இனங்களில் அழைப்புகள் அதிகமாக வந்துள்ளது. இந்தத் திட்டம் பொதுமக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. பொதுமக்களும் இந்தத் திட்டத்தை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார் அவர்..

Top