logo
ஈரோட்டில் இன்று 1374 மையங்களில் 2 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து

ஈரோட்டில் இன்று 1374 மையங்களில் 2 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து

31/Jan/2021 06:40:10

ஈரோடு, ஜன: போலியோ என்னும் இளம்பிள்ளை வாத நோய்யை  தடுப்பதற்காக நாடு தழுவிய அளவில் தீவிர போலியோ சொட்டு மருந்து முகாம் தொடங்கப்பட்டு 5 வயதுக்குள் பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து  கொடுக்கப்பட்டு வருகிறது.

அதன்படி, ஞாயிற்றுக்கிழமை நாடு முழுவதும் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுக்கப்பட்டது. ஈரோடு மாவட்டத்தில் இதற்காக 1374 மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன.

ஈரோடு அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார மையங்கள், தனியார் மருத்துவமனைகள், மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, பள்ளிக்கூடங்கள்,  சத்துணவு மையங்கள், அங்கன்வாடி மையங்கள், தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சுங்கச் சாவடிகள், மேலும் மக்கள் அதிகம் கூடும் இடங்களான பஸ் நிலையம் ரெயில் நிலையங்கள், கோவில்கள் உள்பட பல்வேறு இடங்களில் போலியோ சொட்டு மருந்து முகாம்கள் அமைக்கப்பட்டிருந்தன. இதுதவிர நடமாடும் குழுக்களும்  அமைக்கப்பட்டிருந்தன.

போலியோ சொட்டு மருந்து முகாம்கள் அமைக்கப்பட்டு இருந்த இடத்திற்கு காலை முதலே பெற்றோர்கள் ஆர்வத்துடன் தங்களது பிள்ளைகளை அழைத்து வந்து போலியோ சொட்டு மருந்தை  போட்டுக் கொண்டனர்.

தற்போது கொரோனா காலகட்டம் என்பதால் அரசு அறிவித்துள்ள பாதுகாப்பு வழிமுறைக ளுடன் போலியோ சொட்டு மருந்து முகாம் நடந்தது. குழந்தைகளை அழைத்து வந்த பெற் றோர்கள் கண்டிப்பாக முகக்கவசம் அணிய அறிவுறுத்தப்பட்டிருந்தது. அதைப்போன்று போலியோ சொட்டு மருந்து போடும் நர்சுகள், பிற பணியாளர்கள் முக கவசம் அணிந்து இருந்தனர்.

ஈரோடு மாவட்டத்தில் போலியோ சொட்டு மருந்து முகாமிற்காக பிற துறையைச் சார்ந்த 5361  பணியாளர்களும், 172 மேற்பார்வையாளர்கள் , மாவட்ட அளவில் 9 சிறப்பு குழுக்களும் பணியில் அமர்த்தப் பட்டிருந்தனர்.

முதல்நாளில் போலியோ சொட்டு மருந்து போட முடியாத குழந்தைகளுக்காக இந்த குழுவினர் அடுத்த இரண்டு நாட்களில் நேரடியாக வீடுகளில் சென்று போலியோ சொட்டு மருந்து செலுத்துவார்கள் என்று சுகாதாரத் துறையினர் தெரிவித்தனர்.

ஈரோடு பஸ் நிலையத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம் மூலம் ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது. ஈரோடு மாநகராட்சி ஆணையாளர் இளங்கோவன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில்  எம்.எல்.ஏ- கே.எஸ்.தென்னரசு ஒரு குழந்தைக்கு போலியோ சொட்டு மருந்தை செலுத்தி முகாமினை தொடங்கி வைத்தார். மாவட்ட நகர் நல அலுவலர் முரளி சங்கர், பகுதி செயலாளர் கேசவமூர்த்தி உள்பட பலர் உடனிருந்தனர். 

Top