logo
ஈரோடு மாவட்டத்தில் இதுவரைஉரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.2.7 கோடி பறிமுதல்

ஈரோடு மாவட்டத்தில் இதுவரைஉரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.2.7 கோடி பறிமுதல்

03/Apr/2021 08:23:42

ஈரோடு, ஏப்: ஈரோடு மாவட்டத்தில் இதுவரைஉரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்டரூ.2.7 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.



தமிழக சட்டமன்ற தேர்தல் வரும்  6-ஆம் தேதி நடைபெற உள்ளது.இதையொட்டி தற்போது தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளது. தேர்தலை ஒட்டி வாக்காளர்களுக்கு பணம் பரிசுப் பொருட்கள் கொண்டு செல்வதைத் தடுக்க அனைத்து தொகுதிகளிலும் தேர்தல் பறக்கும் படை, நிலை கண்காணிப்புக் குழு, வீடியோ குழுவினர் அமைக்கப்பட்டு தீவிர வாகன தணிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் ரூ .50 ஆயிரத்துக்கு மேல் எடுத்து செல்ல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட் டுள்ளது.  அப்படி உரிய ஆவணங்களின்றி எடுத்துச் செல்லப்படும் பணம் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது.

 

ஈரோடு மாவட்டத்தில் 8 தொகுதிகளிலும் தேர்தல் பறக்கும் படை, நிலை கண்காணிப்புக் குழு அமைக்கப்பட்டு தீவிர வாகன தணிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் ஈரோடு கிழக்கு தொகுதியில் இதுவரை ரூ .41லட்சத்து 63 ஆயிரத்து 980, மேற்கு தொகுதியில் ரூ. 15 லட்சத்து 13 ஆயிரத்து 310, மொடக்குறிச்சியில் ரூ 24லட்சத்து 28ஆயிரத்து 420, பெருந்துறையில் ரூ .16 லட்சத்து 25 ஆயிரத்து 158, பவானி தொகுதியில் ரூ.19லட்சத்து 53 ஆயிரத்து 500, அந்தியூரில் ரூ .14 லட்சத்து 58 ஆயிரத்து 700, கோபியில் ரூ.25 லட்சத்து 22 ஆயிரத்து 600, பவானிசாகர் (தனி) ரூ 50 லட்சத்து 71 ஆயிரத்து 100 என 8 தொகுதிகளிலும் இதுவரை ரூ.2 கோடியே 7 லட்சத்து 36ஆயிரத்து 768 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 

 

இதில் உரிய ஆவணங்கள் காட்டியதால் ரூ.1 கோடியே 43 லட்சத்து 29 ஆயிரத்து 300 ரூபாய் திரும்ப உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. ரூ 64 லட்சத்து 7 ஆயிரத்து 468 கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது. ஈரோடு மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தது முதல் இது நாள்வரை மாவட்டம் முழுவதும்  110 பேர் இடம் உரிய ஆவணங்கள் இன்றி பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதில் 72 பேர் உரிய ஆவணங்கள் காட்டி தங்களது பணத்தை மீண்டும் திரும்ப பெற்று சென்றுள்ளனர். இன்னும் 38 பேரின் பணம் கருவூலத்தில் உள்ளது.

Top