logo
உண்டியலில் சேமித்த ரூ.5 ஆயிரத்தை கொரோனா நிவாரண நிதிக்கு வழங்கி அமைச்சரை நெகிழ வைத்த குழந்தைகள்.

உண்டியலில் சேமித்த ரூ.5 ஆயிரத்தை கொரோனா நிவாரண நிதிக்கு வழங்கி அமைச்சரை நெகிழ வைத்த குழந்தைகள்.

15/May/2021 02:44:51

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே உண்டியலில் சேமித்த ரூ. 5 ஆயிரத்தை கொரோனா நிவாரண நிதியாக வழங்கி  சுற்றுச்சூழல், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதனை 2 குழந்தைகள் நெகிழ வைத்தனர்.

 ஆலங்குடி தொகுதிக்கு உள்பட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள நியாய விலைக்கடைகளில் ரூ.2 ஆயிரம் கரோனா நிவாரண நிதி வழங்கும் திட்டத்தை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் தொடங்கி வைத்தார். அதில், கொத்தகோட்டை  நியாய விலைக்கடையில் திட்டத்தை தொடங்கி வைத்தபோது, அப்பகுதியைச் சேர்ந்த  பிச்சைமுத்து என்பவரின் மகள் நிலவரசி (6), மகன் சபரிதரண் (4) ஆகியோர் தாங்கள் நீண்ட நாட்களாக உண்டியலில் சேமித்து வைத்திருந்த ரூ.5 ஆயிரத்தை  முதல்வரின் கொரோனா நிவாரண நிதிக்காக வழங்கினர். மேலும், இந்த தொகையை உயிரிழந்த தனது தாயின் நினைவாக வழங்குவதாக குழந்தைகள் தெரிவித்ததனர். இதில்,  நெகிழ்ச்சியடைந்த அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் இரு குழந்தைகளுக்கும் பாராட்டு தெரிவித்தார்.

தொடர்ந்து, ஆலங்குடி, பாத்தம்பட்டி, வடகாடு, மாங்காடு உள்ளிட்ட பகுதிகளில் திட்டத்தை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் தொடங்கி வைத்தார்.

நிகழ்வில், மாவட்ட வருவாய் அலுவலர் சரவணன், வட்டாட்சியர் கருப்பையா, திருவரங்குளம் ஒன்றியக்குழுத் தலைவர் வள்ளியம்மை தங்கமணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

 

 

 

 

 

Top