logo
ஈரோடிலுள்ள போலீஸாருக்கு முகக்கவசம், முகக்கேடயம்: கிழக்குத்தொகுதி எம்எல்ஏ வழங்கல்

ஈரோடிலுள்ள போலீஸாருக்கு முகக்கவசம், முகக்கேடயம்: கிழக்குத்தொகுதி எம்எல்ஏ வழங்கல்

20/May/2021 05:53:01

ஈரோடு, மே: ஈரோடிலுள்ள போலீஸாருக்கு முகக்கவசம், முகக்கேடயத்தை கிழக்குத்தொகுதி எம்எல்ஏ  திருமகன் ஈவெரா வழங்கினார்.

 ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினர்  .திருமகன் ஈவெரா  காவல்துறையில் பணிபுரியும் காவலர்களுக்கு உதவிடும் வகையில்  500 முகக் கவசங்கள், முகக் கண்ணாடி கவசங்கள் (Face Shield) ஆகியவற்றை ஈரோடு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் உள்ள பொறுப்பு ஆய்வாளரிடம் வியாழக்கிழமை வழங்கினார்.

இதில், ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் .பி.ரவி, துணை தலைவர் ராஜேஷ் ராஜப்பா மற்றும் மண்டல தலைவர்களான டி திருச்செல்வம்,எச்.எம்.ஜாபர் சாதிக், ஆர்.விஜயபாஸ்கர், முன்னாள்  இளைஞர் காங்கிரஸ் மாவட்ட தலைவர் விஜய்கண்ணா, மொடக்குறிச்சி வட்டார முன்னாள் தலைவர் வி.கே.செந்தில் ராஜா, இளைஞர் காங்கிரஸ் மேற்கு சட்டமன்ற தலைவர் திண்டல் பாலாஜி, ஈரோடு மாநகர மாவட்ட சிறுபான்மை துறை துணைத்தலைவர் கே.என்.பாஷா மற்றும் கார்த்திக் ராம் ஆகியோர் உடனிருந்தனர்.

Top