logo
புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரியில் அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன் ஆய்வு

புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரியில் அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன் ஆய்வு

14/May/2021 10:58:40

புதுக்கோட்டை, மே: புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தமிழக சுற்றுச்சூழல் மற்றும் இளைஞர் நலன் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் நேரில் சென்று ஆய்வு செய்தார்.

தமிழகமுதல்வர் ஸ்டாலின் உத்தரவுப்படி கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டு ஒவ்வொரு மாவட்டத்துக்கும் கண்காணிப்பு அலுவலர் மற்றும் கொரோனா தடுப்பு பணிகளுக்காக ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்களும் தடுப்புபணியில் ஈடுபட வேண்டுமென அறிவுறுத்தியுள்ளார். இதனைத்தொடர்ந்து  தமிழகம் முழுவதும் அமைச்சர்கள், எம்எல்ஏ-க்கள் மருத்துவமனைகளில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

 கொரோனாவ தடுப்புப்பணியில் மக்களுக்கு அத்தியாவசியத்தேவையாக உள்ள ஆக்சிஜன் பற்றாக்குறையைப் போக்குவதில் அரசு  முழு கவனம் செலுத்தி வருகிறது. புதுக்கோட்டை மாவட்டத்துக்கு கிடைத்துள்ள அமைச்சர்கள் எஸ். ரகுபதி, சிவ.வீ.மெய்யநாதன், புதுக்கோட்டை எம்எல்ஏ- டாக்டர் வை. முத்துராஜா  ஆகியோர் கடந்த 2 நாள்களாக புதுக்கோட்டை மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனயை ஆய்வு செய்து  கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உள்ள ஆக்சிஜன் கையிருப்பை ஆய்வு செய்தார். ஆக்சிஜன் பற்றாக்குறையின்றி பார்த்துக்கொள்ள தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார். இதில், எம்எல்ஏ- டாக்டர் முத்துராஜாகல்லூரி முதல்வர் பூவதி, திமுக நிர்வாகிகள் .சந்திரசேகரன், . நைனாமுகமது ஆகியோர் உடனிருந்தனர்.

Top