logo
திமுக மக்களிடம் புகார் மனுக்கள் வாங்குவதை முதல்வரால் பொறுத்துக்கொள்ள  முடியவில்லை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்.

திமுக மக்களிடம் புகார் மனுக்கள் வாங்குவதை முதல்வரால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்.

21/Feb/2021 09:22:16

ஈரோடு, பிப்: திமுக மக்களிடம் புகார் மனுக்கள் வாங்குவதை முதல்வரால் பொறுத்துக் கொள்ள  முடியவில்லை என்றார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்.

 ஈரோடு மாவட்டம், பெருந்துறை அருகேயுள்ள கடப்பமடை பகுதியில் உங்கள் தொகுதியில் ஸ்டாலின் நிகழ்ச்சியில் பங்கேற்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தொண்டர்களிடையே மனுக்களை பெற்று  பல்வேறு சாதனைகள் செய்த தனி நபர்கள்  மற்றும் அமைப்புகளுக்கு  சால்வை அணிவித்து  மு.க.ஸ்டாலின்   பாராட்டு தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து, ஈரோட்டின் அவல நிலைகளை குறும்படமாக திரையிடப்பட்டது.  சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கருப்பண்ணன்  துறையில் வெளிப்படையாக லஞ்சம் கேட்பது தொடர்பான  ஆடியோயும் அக்கூட்டத்தில் வெளியிட்டனர்.

இதைத்தொடர்ந்து, மு.க.ஸ்டாலின் பேசியது: ஒவ்வொரு துறையிலும் கடைசி நேரத்தில் கொள்ளையடிக்க அதிமுகவினர் திட்டமிட்டு புதிய திட்டங்களை அறிவிப்பதாகவும் , 3 மாதத்திற்கு பிறகு திமுக ஆட்சி அமைந்தவுடன் தவறு செய்பவர்கள் சிறையில் அடைக்கப்படுவர்கள.

 திமுக ஆட்சிக்கு வந்தவுடன் வேலையிழந்த  மக்கள் நலப்பணியாளர்களுக்கு மீண்டும் வேலை வழங்கப்படும். தொண்டர் களிடையே வாங்கிய மனுவின் பிரச்னைகளை தீர்க்க தனி அதிகாரி நியமிக்கப்படுவர். தீர்வு இல்லையென்றால் உங்களிடம் கொடுக்கப்பட்ட அட்டையை கொண்டு வந்து என்னை கோட்டையில் நேரில் சந்திக்கலாம். அதற்கான அனுமதி அட்டைதான் இது. இதை பத்திரமாக வைத்திருக்க வேண்டும்.

கலைஞர் என்னை மகனாக பார்க்கவில்லை தொண்டனாகவே பார்த்தார். எப்போது நான் தலைமை தொண்டனாகவேதான்  நினைக்கிறேன். கடந்த 10 ஆண்டுகளில் தமிழகம் அனைத்து துறைகளிலும் பாதாளத்திற்கு சென்றுவிட்டது.

 மக்களிடம் புகார் வாங்குவதை  முதல்வரால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. போன் செய்தால் குறைகள் தீர்க்கப்படும் என முதல்வர் கூறவில்லை  உங்கள்  குறைகளை மட்டுமே கேட்பார்கள் என்கிறார்.தேர்தல் நெருங்கி வருவதால் 20 லட்சம் வேலை வாய்ப்பு உருவாக்கப்படும் என்கின்ற முதல்வர் , கடந்த 4 ஆண்டுகளில் உருவாக்கப்பட்ட வேலை வாய்ப்பு என்ன என்பதை மக்களிடம் கூற வேண்டும்.

தமிழகத்தில் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் 1 கோடி பேர் வேலை வாய்ப்புக்காக பதிவு செய்து  காத்து இருக்கின்றனர்  அரசு காலிப்பணியிடங்கள் நிரப்படவில்லை. இரண்டு தொழில் முனைவோர் மாநாட்டின் மூலம் உருவாக்கப்பட்ட வேலை வாய்ப்புகள்  என்ன என்பதே யாருக்கும் தெரியாது.



அதிமுக ஆட்சியில் டெண்டர் கொள்ளை நடக்கிறது. 3888 பணிகளுக்கு டெண்டர் விடப்பட்டுள்ளன.  திமுக ஆட்சிக்கு வந்தவுடன் இந்த டெண்டர்கள் மீது  உரிய விசாரணை நடத்தப்படும். கூவத்தூரில் முதல்வர் ஆனது போல் கருணாநிதி ஆகவில்லை.

தமிழ் காக்கும் போராட்டத்தில் ஈடுப்பட்டவர் கருணாநிதி. ஆட்சி கவிழும் என தெரிந்தே மாநில மக்களுக்காக மத்திய அரசை எதிர்த்தவர் கருணாநிதி. சசிகலா முதல் மோடி வரை அனைவரது பாதமும் தாங்கும் பழனிசாமிக்கு கருணாநிதி பற்றி  பேச தகுதியில்லை. கருணை மிகுந்த திமுக ஆட்சி வரும். மக்களின்  கவலைகள் தீரும் என்றார்.


Top