24/May/2021 11:39:46
புதுக்கோட்டை, மே: நடமாடும் ஆவின் பால் விநியோகத் திட்டத்தை உடனடியாக தொடங்க வேண்டுமென தமிழக முதல்வருக்கு புதுக்கோட்டை காந்திப் பேரவை நிறுவனர் வைர.ந. தினகரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: பொது மக்கள் பால் வாங்க வெளியில் செல்வதை தவிர்க்க ஆவின் மூலமாக வீடுகளுக்கு பால் கிடைக்கும் வித மாக நடமாடும் ஆவின் பால் விநியோகத்தையும், பால் தேவைப்படுவோர்கள் இலவசமாக அழைக்கும் விதமாக அதற்கான பொது அழைப்பு எண்ணையும் அறிமுகப் படுத்த தமிழக அரசு உடனடியாக முன்வரவேண்டும்.
இதன் மூலம் பொதுமக்களை வெளியில் வராமல் இருக்கச் செய்வதோடு, ஆவின் விற்பனை யையும் அதிகரிக்கமுடியும். . மேலும், புதியவர்களையும் அரசு நிறுவனமான ஆவின் பால் வாங்கும் வாடிக்கையாளர்களாக மாறும் வாய்ப்புள்ளது ஆவின் நிறுவனம் லாபம் பெறவும் முடியும். இப்படி பல வகையில் பயனளிக்க கூடிய நடமாடும் ஆவின் பால் விநியோகத் திட்டத்தை தமிழக முதல்வர் உடனடியாக தொடங்க காந்திப் பேரவை சார்பாக வலியுறுத்து வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.