logo

ஈரோடு மாநகராட்சி மண்டபத்திலிருந்து கொரோனா ஸ்கிரீனிங் சென்டர் கலைமகள் பெண்கள் பள்ளிக்கு இடமாற்றம்

05/Jun/2021 10:52:45

ஈரோடு, ஜூன்: ஈரோடு மாநகராட்சி மண்டபத்திலிருந்து கொரோனா ஸ்கிரீனிங் சென்டர்  கலைமகள் பெண்கள் பள்ளிக்கு  இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.

ஈரோடு மாநகரில் கொரோனா தொற்று உறுதி செய்யப்படும் நபர்களுக்கு ஈரோடு மாநக ராட்சி திருமண மண்டபம், அரசு தலைமை மருத்துவமனை என, இரண்டு இடத்தில், ஐந்து வகையான பரிசோதனை செய்வதற்கான கொரோனா ஸ்கிரீனிங் மையம் அமைக்கப் பட்டது.

இங்கு பரிசோதனை செய்யப்பட்டு தொற்று பாதிப்பு ஏற்பட்ட நபருக்கு நோயின் தன்மைக்கு ஏற்ப வீடுகளிலோ, சிறப்பு சிகிச்சை மையத்திலோ அல்லது மருத்துவமனையில் அனுமதிக்க ப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

ஈரோடு அரசு மருத்துவமனை ஸ்கிரீனிங் சென்டரில் தினமும் 50 பேருக்கும், மாநகராட்சி மண்டபத்தில் உள்ள ஸ்கிரீனிங் சென்டரில் தினமும் 50 பேருக்கும் பரிசோதனை செய்யப் பட்டு வந்தது. இதில் மாநகராட்சி திருமண மண்டபத்தில் இட பற்றாக்குறை காரணமாகவும், அரசு தலைமை மருத்துவ மனையில், மற்ற நோயாளிகளுடன், தொற்று பாதித்தவர்கள் கலந் து செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளதாலும்,

அந்த இரு இடங்களில் இருந்த ஸ்கிரீனிங் மையங்களை இடமாற்றம் செய்ய முடிவு செய்ய ப்பட்டு ஒரே இடத்தில் வைக்க முடிவு செய்யப்பட்டது.  அதன்படி, ஈரோடு மீனாட்சி சுந்தரனார் சாலையில் உள்ள கலைமகள் பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு இரண்டு ஸ்கிரீனிங் மையங் களும் இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:இரண்டு ஸ்கிரீனிங் மையங்களும் இடமாற்றம் செய்ய முடிவு செய்யப்பட்டு ஈரோடு கலைமகள் பெண்கள் மேல்நிலைப்பள் ளியில் இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இன்று முதல் ஸ்கிரீனிங் மையங்கள் செயல்பட தொடங்கியுள்ளது. இங்கு தினமும் 150 கொரோனா நோயாளிகளுக்கு பரிசோதனை செய் யப்படும் என்று  கூறினர்.

Top