logo
புத்தாஸ் வீரக்கலைகள் கழகம்-செஞ்சுரி லயன்ஸ் சங்கம் சார்பில் குழந்தைகளுக்கு தீபாவளி இனிப்பு

புத்தாஸ் வீரக்கலைகள் கழகம்-செஞ்சுரி லயன்ஸ் சங்கம் சார்பில் குழந்தைகளுக்கு தீபாவளி இனிப்பு

12/Nov/2020 09:32:29

புதுக்கோட்டை:    புதுக்கோட்டை.புத்தாஸ் வீரக்கலைகள் கழகம் செஞ்சுரி லயன்ஸ் சங்கம்  இணைந்து நடத்திய  தீபாவளி  கொண்டாட்டம் திலகர் திடலில் நடைபெற்றது.

சங்கத்தலைவர்  புவனேஸ்வரி தங்க மாளிகை  எஸ். நடராஜன் கலந்துகொண்டு புத்தாஸ் வீரக்கலைகள்  மாணவ மாணவிகளுக்கு  பாதுகாப்பாக  தீபாவளி கொண்டாடுவது பற்றியும் உடல் பயிற்சியால் வாழ்க்கையில் உயர்ந்த நிலைக்கு வரமுடியும் என்றும், புத்தாண்டில் அனைவருக்கும் டி-ஷர்ட் வழங்கப்படும் என்று கூறி இனிப்புகள்  வழங்கி  வாழ்த்தினார்.புத்தாஸ் வீரக்கலைகள் கழக நிறுவனர்.சேதுகார்திகேயன்,  செஞ்சுரி லயன்ஸ் சங்க செயலர் அரவிந்த்,  பெற்றோர் சங்க நிர்வாகிகள் மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.  


Top