logo
ஆலங்குடி அருகே பாஜக மாநில நிர்வாகி கார் மோதிய விபத்தில் இளைஞர் படுகாயம்

ஆலங்குடி அருகே பாஜக மாநில நிர்வாகி கார் மோதிய விபத்தில் இளைஞர் படுகாயம்

04/Feb/2021 06:21:07

புதுக்கோட்டை, பிப்: புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் நடைபெற்ற பாஜக பிரமுகர் திருமண விழாவில் கலந்து கொண்டுவிட்டு  திரும்பிக்கொண்டிருந்த  பாஜக மாநில துணைத்தலைவர் கருப்பு முருகானந்தம் என்பவரது கார் எதிர்பாராதவிதமாக மோதியதில் இரு சக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் படுகாயமடைந்தார். இச்சம்பவம் குறித்து வடகாடு போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர். 

 ஆலங்குடியில் நடந்த நிகழ்ச்சியிவ் பங்கேற்ற  பிறகு முத்துப்பேட்டையில் மற்றொரு திருமண நிகழ்ச்சிக்காக  தனது காரில்  வடகாடு அருகே உள்ள மாங்காடு பகுதியில் எதிரே இருசக்கர வாகனத்தில் வந்த தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே  முத்துக்காடு பகுதியைச் சேர்ந்த திலகர் என்பவர் மீது மோதியது. இவ்விபத்தில்  கை முறிந்து  பலத்த காயமடைந்தார்.

இதனையடுத்து விபத்தில் சிக்கியவர்களை மீட்ட அப்பகுதியினர் பாஜக மாநிலத் துணைத் தலைவர் கருப்பு முருகானந்தத்தின் காரில் ஏற்றி சிகிச்சைக்காக ஆலங்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கார் விபத்துக்குள்ளானதால்  பாஜக மாநில நிர்வாகி கருப்பு முருகானந்தம் மாற்று வாகனத்தின் மூலம் முத்துப்பேட்டை நிகழ்ச்சிக்கு கிளம்பிச் சென்றார். இந்த விபத்து குறித்து  வடகாடு  போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Top