logo
பெட்ரோல் டீசல் விலை உயர்வைக் கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பல்வேறு பகுதிகளில் ஆர்ப்பாட்டம்

பெட்ரோல் டீசல் விலை உயர்வைக் கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பல்வேறு பகுதிகளில் ஆர்ப்பாட்டம்

08/Jun/2021 02:29:23

புதுக்கோட்டை, ஜூன் பெட்ரோல் டீசல் விலை உயர்வைக் கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கோரிக்கைகள்மிழக அரசு  கேட்டிருக்கும் கொரோனா தடுப்பு மருந்துகளை மத்திய அரசு தாமதமின்றி  வழங்க வேண்டும். அதைப்போல தமிழ்நாட்டிற்கு சேரவேண்டிய ஜிஎஸ்டி வரி வருவாய் மற்றும் நிலுவையில் உள்ள நிதிகளை வழங்க வேண்டும். பெட்ரோல் டீசல் இவற்றிற்கு மத்திய அரசு வழி வகைகளை குறைத்து பெட்ரோல் ரூபாய் 50-க்கும்  டீசல் ரூபாய் 40-க்கும்  விற்பனை செய்ய வழிவகை செய்ய வேண்டும்.

செங்கல்பட்டில் மத்திய அரசு கட்டுப்பாட்டில் பூட்டி இருக்கிற ஹிந்துஸ்தான் தடுப்பூசி தயாரிக்கும் நிறுவன வளாகத்தை தமிழக அரசிடம் ஒப்படைத்து தடுப்பூசி உற்பத்திக்கு மத்திய அரசு ஒத்துழைப்பு தரவேண்டும் என்பன உள்ளிட்ட  கோரிக்கைகளை வலியுறுத்தி  ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில குழு  எடுத்த  முடிவின்படி    இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் புதுக்கோட்டை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

 திருவரங்குளம் ஒன்றியத்தில் 19 இடங்களில் ஆர்ப்பாட்டம்:


 ஆலங்குடியில் ஒன்றிய செயலாளர்  ஆர் சொர்ணகுமார் தலைமையில் நகரச் செயலாளர் முத்துக்கருப்பன் முன்னிலையிலும்கீரமங்கலத்தில் நகரச் செயலாளர் தமிழ்மாறன் தலைமையில்  கடைவீதியிலும்பவானந்தம் தலைமையிலும், சந்தைப்பேட்டையில் மாவட்ட குழு உறுப்பினர் மணி தலைமையிலும், கைகாட்டியில்   கிளைச் செயலாளர் கண்ணன் தலைமையிலும்.

கொத்தமங்கலத்தில் ஒன்றிய துணைச் செயலாளர் செல்வராசு தலைமையிலும் சுன்டாங்கிவலசலில்  திலகர் தலைமையிலும் கீழகாட்டில் பூமதி தலைமையிலும் நாச்சான் இல்லம் முன்பு ராச குனசேகரன் தலைமையிலும் குலமங்கலம் வடக்கில் மாவட்ட குழு உறுப்பினர் செல்வகுமார் தலைமையிலும் சந்தைப்பேட்டையில் ஒன்றிய குழு உறுப்பினர் அசோகன் தலைமையிலும்

னங்குளம் வடக்கு  மருதன் தலைமையிலும் பனங்குளம் தெற்கில் கலப்பையா தலைமையிலும் மாங்காட்டில் ஆறுமுகம் தலைமையிலும் வன்னியன் விடுதியில் முருகன் தலைமையில் திருக்கட்டளை விஜயன் தலைமையிலும் வேப்பங்குடி வி ஆர் லெனின் தலைமையிலும் பாலையூரில் வேலன் தலைமையிலும் நெடுவாசலில் ஆனந்தன் தலைமையிலும் ஆர்ப்பாட்டம் 19 இடங்களில் நடை பெற்றது..

அன்னவாசல் ஒன்றியம்:  அன்னவாசலில் பேருந்து நிலையம் அருகில் ஒன்றிய பொருளாளர் எம் மீரா முகைதீன் தலைமையில் நடைபெற்றது . இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட துணைச் செயலாளர் கே. ஆர். தர்மராஜன் தொடங்கி வைத்தார்.


ஒன்றிய துணை செயலாளர்கள் சி ஆனந்த் நாகராஜ் ஒன்றிய குழு உறுப்பினர்கள் செல்வம் மதி ஜீவானந்தம் நகர குழு உறுப்பினர்கள் ஜாபர் அலி மற்றும் ஏஐடியூசி நிர்வாகி ஜீவானந்தம்  உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Top