logo
 ஈரோடு மாவட்டத்தில் புதிய உச்சமாக 779 பேருக்கு தொற்று: ஈரோடு மாநகர் பகுதியில் ஒரே நாளில் 270 பேருக்கு கொரோனா தொற்று

ஈரோடு மாவட்டத்தில் புதிய உச்சமாக 779 பேருக்கு தொற்று: ஈரோடு மாநகர் பகுதியில் ஒரே நாளில் 270 பேருக்கு கொரோனா தொற்று

09/May/2021 08:42:18

ஈரோடு, மே: ஈரோடு மாவட்டத்தில் புதிய உச்சமாக 779 பேருக்கு தொற்று: ஈரோடு மாநகர் பகுதியில் ஒரே நாளில் 270 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

கொரோனா இரண்டாம் அலை வேகமாக பரவி வருகிறது. தினசரி பாதிப்பு நாளுக்கு நாள் புதிய உச்சம் தொட்டு வருகிறது. குழந்தைகள், இளைஞர்கள், முதியவர்கள் என அனைவரையும் வயது பேதமின்றி தாக்கி வருகிறது.இதேபோல் ஈரோடு மாநகர், புறநகர் மாவட்டம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது.

இதனை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம், சுகாதாரப்துறையினர், மாநகராட்சி ஒன்றிணைந்து பல்வேறு தடுப்பு நடவடிக்கை களை போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டு வருகின்றனர். தற்போது இரண்டாம் அலையில் குழந்தைகள், முதியவர்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் மாநகரப் பகுதியில் மொத்த மதிப்பில் மூன்றில் ஒரு பங்கு ஏற்பட்டு வருகிறது.

 நேற்று சுகாதாரத்துறையினர் வெளியிட்டுள்ள புள்ளிவிவரம்படி மாவட்டத்தில் இதுவரை இல்லாத அளவாக புதிய உச்சமாக ஒரே நாளில் 779 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் பாதித்தவர்கள் மொத்த எண்ணிக்கை 26,016ஆக உயர்ந்துள்ளது. 55 வயது பெண் ஒருவர் கொரோனா தாக்கம் காரணமாக பெருந்துறையில் உள்ள மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார் . அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார்.

 இதனால் கொரோனாவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 172 ஆக உயர்ந்தது. அதேநேரம்  ஒரே நாளில் 551 பேர் நோய் பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பினர். இதனால் மாவட்டத்தில் இதுவரை 22 ஆயிரத்து 5 பேர் தொற்றி லிருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பாதிப்பு உயர்ந்து வருவது போல் குணமடைந்தவர்கள் எண்ணிக்கையும் உயர்ந்து வருவது சற்று நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

மாவட்டத்தில் தற்போது 3839 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். பவானி அருகே உள்ள காளிங்கராயன் பாளையம் என். எம். எஸ் வீதியில் சுமார் 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின் றனர்அங்கு சுகாதாரத்துறை உத்தரவுபடி சித்தோடு அரசு மருத்துவமனை மூலமாக மக்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் அங்கு வசிக்கும் 10 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அந்த 2 வீதிகள்  தடுப்பு வேலிகள் வைத்து அடைத்து  சுகாதாரப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இதேபோல் ஈரோடு மாநகர் பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொற்று வேகமாக பரவி வருகிறது. பரவலை கட்டுப்படுத்த மாநகராட்சி சார்பில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாநகராட்சி பகுதியில் உள்ள 60 வார்டுகளிலும் கிருமிநாசினிகள் செலுத்தப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் நேற்று ஒரே நாளில் மாநகர் பகுதியில் இதுவரை இல்லாத அளவாக 270 பேருக்கு தொற்று உறுதி செய்துள்ளது. இதில் லேசான அறிகுறியுடன் தொற்று ஏற்பட்டவர் களுக்கு ஸ்கிரீனிங் சென்டர் மூலம் சோதனை செய்யப்பட்டு அவர்கள் வீடுகளில் தங்களைத் தனிமைப் படுத்திக் கொண்டுள்ளனர்.

Top