logo
கொரோனா பரவல் எதிரொலி அச்சம்... ஈரோட்டில் அரசு, தனியார் பேருந்துகளில் பயணிகள் கூட்டம் குறைந்து போனது

கொரோனா பரவல் எதிரொலி அச்சம்... ஈரோட்டில் அரசு, தனியார் பேருந்துகளில் பயணிகள் கூட்டம் குறைந்து போனது

01/May/2021 05:57:51

ஈரோடு, மே: கொரோனா பரவல் எதிரொலி அச்சம் காரணமாக   ஈரோட்டில் இயங்கும் அரசு, தனியார் பேருந்துகளில் பயணிகள் கூட்டம் குறைந்து போனதால் நஷ்டத்தை சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

 கொரோனா 2 - ஆவது அலை வேகமாக பரவி வருவதால் தினமும் தொற்றால் பாதித்தவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதையடுத்து இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதனால்  இரவு நேர  பேருந்து  போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் காலை நேரங்களில் கூடுதல் பேருந்துகள்  இயக்கப்பட்டு வருகின்றன.

 ஈரோடு மாவட்டத்தில் 11 பணிமனைகள் மூலம்  தினமும் 728 பேருந்துகள் இயக்கப்பட்டு வந்தது. இதேபோல் தினமும் 269 தனியார்  பேருந்துகளும்  இயக்கப்பட்டன. இரவு நேர ஊரடங்கால் தனியார் பேருந்துகளில் 70 சதவீத பேருந்துகள்  மட்டுமே இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தற்போது மாவட்டத்தில் கொரோனா தாக்கம் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் பேருந்து பயணத்தை தவிர்த்து வருகின்றனர்.

ஒரு சிலர் மட்டுமே பயணம் செய்து வருகின்றனர். இதனால் காலை வேளைகளில் இயக்கப்படும் பேருந்துகளில் பயணிகள் கூட்டமின்றி  காணப்படுகிறது. அரசும் அரசு மற்றும் தனியார்  பேருந்துகளில் பயணிகள் கூட்டமில்லாததால் தனியார் பேருந்து உரிமையாளர்கள் கடும் நஷ்டத்தை சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

Top