logo
குருதிக்கூடு அமைப்பு சார்பில் கடந்த 9 மாதத்தில் 900 யூனிட் ரத்ததானம் வழங்கி சாதனை

குருதிக்கூடு அமைப்பு சார்பில் கடந்த 9 மாதத்தில் 900 யூனிட் ரத்ததானம் வழங்கி சாதனை

30/Apr/2021 12:05:27

 

புதுக்கோட்டை, ஏப்: குருதிக்கூடு அமைப்பு சார்பில் கடந்த 9 மாதத்தில் 900 யூனிட் ரத்ததானம் வழங்கி மனித நேயப்பணியை தொடர்ந்து வருகிறது.

உதிரம் கொடுப்போம்.. உயிர்களைக் காப்போம் என்ற இலட்சியத்தை அடிநாதமாகக்கொண்டு புதுக்கோட்டை மாவட்டத்தில் குருதிக்கூடு அமைப்பு மனித நேய சேவையாற்றி வருகிறது. கடந்த 9 மாதங்களில்  இந்த அமைப்பினர் 900 யுனிட் ருதிக்கொடை அளித்து பல நூற்றுக்கணக்கான உயிர்களை காப்பாற்ற உதவியுள்ளனர்.

இது குறித்து குருதிக்கூடு அமைப்பைச்சார்ந்த ஊடகவியலாளர் முத்துப்பழம்பதி கூறுகையில்குருதிக்கூடு அமைப்பின் இந்த சாதனைக்கு உறுதுணையாக இருந்து முகமறியாத பலரும்  அகமகிழ்வோடு தொடர்ந்து குருதிக்கொடை அளித்துவரும்  செயல்பாடு மன மகிழ்வை ஏற்படுத்துகிறது.


 இருந்த போதிலும் தற்போதைய கொரோனா இரண்டாம் அலையின் பாதிப்பு காரணமாக  சில சகோதரர்கள் குருதிக் கொடை அளிக்க தயங்குவதன் காரணமாக  சில உயிர்களை காப்பாற்ற தேவைப்படும்  குருதியை அளிப்பதில்  தொய்வு  ஏற்படுகிறது. தயக்கங்கள் ஏதுமின்றி உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளோடு அனைவரும் குருதிக் கொடை அளித்து உயிர்களை காக்க முன்வரவேண்டும் என்பதே குருதிக்கூடு அமைப்பின் தாழ்மையான எதிர்பார்ப்பு.

புதுக்கோட்டை அரசு இராணியார் மருத்துவமனையில் ஒரு பெண்ணின் பிரசவ தேவைக்காக இன்று குருதிக்கொடை அளித்தது மனநிறைவைத்தருகிறது என்றார் அவர்.

Top