logo
கொரோனா நிவாரண தொகையாக ரூ 5,000 வழங்க வேண்டும்: கோவில் பூசாரிகள் நல சங்கம் கோரிக்கை

கொரோனா நிவாரண தொகையாக ரூ 5,000 வழங்க வேண்டும்: கோவில் பூசாரிகள் நல சங்கம் கோரிக்கை

28/Apr/2021 09:38:44

மன்னார்குடி, ஏப்:  கொரோனா நிவாரண தொகையாக ரூ 5,000 வழங்க வேண்டும் என தமிழக அரசை கோவில் பூசாரிகள் நல சங்கம்  கோரிக்கை விடுத்துள்ளது.

மன்னார்குடி ராஜராஜேஸ்வரி திருமண மண்டபத்தில் மாவட்டத் தலைவர் கோவிந்தராஜ் தலைமையில் புதன்கிழமை நடைபெற்ற கோவில் பூசாரிகள் நல சங்கத்தின் மாவட்ட ஒன்றிய பொறுப்பாளர்கள் கூட்டத்தில் இதற்கான தீர்மானம்   நிறைவேற்றப்பட்டது.

 இந்த கூட்டத்தில், தொற்றை விரட்டியடிக்க பாடுபடும் மருத்துவ சுகாதார துறை அதிகாரிகள் மற்றும் காவல் துறை தூய்மைப் பணியாளர்கள் அவர்கள் பணி சிறப்பானது என்றும் கொரோனா தொற்று நீங்க வேண்டுமென பூசாரிகள் தங்களது திருக்கோவில்களில் பிரார்த்தனை செய்ய வேண்டும்.


மேலும் தற்பொழுது கிராம, நகர திருக்கோவில்களில் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதியில்லை என்பதனால் தட்டுகாசையே நம்பி வாழ்ந்து வரும் பூசாரிகளின் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது பூசாரிகளுக்கு வருவாய் இழப்பை ஈடுசெய்ய முதல் கட்டமாக தமிழக அரசு கொரோனா நிவாரண தொகையாக ரூ 5,000 வழங்க வேண்டும் ,

திருக்கோயில்களில் வருவாய் இல்லாத சூழ்நிலையில் திருக்கோவிலுக்கு மின் கட்டணம் செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதுஇந்த கொரோனா தொற்று முடிவுக்கு வரும் வரை அனைத்து திருக்கோவில்களுக்கும் இலவசமாக மின்சாரம் வழங்க வேண்டும்.   இதுதொடர்பாக மாநிலத் தலைவர் பி.வாசு சார்பில் அரசு தலைமைச் செயலாளருக்கு   ஏற்கெனவே கோரிக்கை மனு  அனுப்பி வைத்ததற்கு நன்றி தெரிவிப்பது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில், மாவட்ட துணைத்தலைவர் கலியமூர்த்தி, மாவட்ட செயலாளர் சேட்டு, குணசேகரன் மற்றும்  மாவட்ட செய்தி தொடர்பாளர் கொரடாச்சேரி அருள் மற்றும் ஒன்றிய பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

Top