14/Nov/2020 08:26:20
ஈரோடு மாவட்டம், கொடுமுடி அருகே சிட்டபுல்லாம் பகுதியை சேர்ந்தவர் ராமசாமி இவரது மனைவி அருக்காணி. இவர்களுக்கு மேனகா என்ற திருமணம் ஆன பெண் ஒருவர் உள்ளார்.
இந்த நிலையில் நேற்று இரவு மேனகா தீபாவளி பண்டிகைக்காக கணவருடன் தனது தந்தையின் வீட்டுக்கு வந்த போது ஊரின் எல்லை பகுதியில் இளைஞர்கள் மது அருந்திவிட்டு பட்டாசுவெடித்து கொண்டு இருந்தனர்.அப்போது இளைஞர்கள் பட்டாசுகளை பற்ற வைத்து மேனகா மீது எறிந்ததாக கூறப்படுகிறது. இதனால் மேனகாவுக்கும் அங்கிருந்த இளைஞர்களுக்கும் தகராறு ஏற்பட்டு உள்ளது.அப்போது அங்கு வந்த ராமசாமி மற்றும் அருக்காணி ஆகிய இருவரும் அங்கிருந்த இளைஞர்களிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.
இதனை அடுத்து ஊர் மக்கள் அனைவரும் ராமசாமியை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.இந்த நிலையில் இன்று காலையில் அறிவாள் வெட்டு காயங்களுடன் ராமசாமியும் அவரது மனைவி ஆகிய இருவரும் வீட்டில் வெட்டுக்காயங்களுடன் இறந்து கிடந்தனர். இதனை கண்ட அப்பகுதி மக்கள் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த கொடுமுடி போலீஸார் சடலத்தை மீட்டு பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.