logo
உலக புத்தக நாளையொட்டி அண்டனூர் சுரா எழுதிய நூல் வெளியீடு

உலக புத்தக நாளையொட்டி அண்டனூர் சுரா எழுதிய நூல் வெளியீடு

23/Apr/2021 11:08:49

புதுக்கோட்டை, ஏப்: உலக புத்தகநாளை(23) முன்னிட்டு புதுக்கோட்டை அறிவியல் இயக்கமும் எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனமும் இணைந்து  நடத்திய விழாவில் அண்டனூர் சுரா எழுதிய சொல்லேர் - என்ற புத்தகம் வெளியிடப்பட்டது.

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மற்றும் எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி றிறுவனம் இணைந் து உலக புத்தக தினம் மற்றும் எழுத்தாளர் அண்டனூர் சுரா எழுதிய சொல்லேர்  நூல் வெளியீட்டு விழா புதுக்கோட்டை தமிழ்நாடு அறிவியல் இயக்க அலுவலகத்தில் நடைபெற்றது.

நிகழ்சிக்கு தமிழ்நாடு அறிவியல் இயக்க  மாநில செயற்குழு உறுப்பினர் எல்.பிரபாகர் தலைமை வகித்தார். நேரு யுவகேந்திரா இளையோர் ஒருங்கிணைப்பாளர் கே.ஜோயல் பிரபாகர் உலக புத்தக தினம் பற்றி விளக்கவுரையாற்றினார்.

எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவன திட்ட ஒருங்கிணைப்பாளர் ஆர்.ராஜ்குமார் எழுத்தாளர் அண்டனூர் சுரா எழுதிய சொல்லேர் எனும் நூலை வெளியிட்டார். அவர் பேசுகையில் உலக புத்தக தினம் பல புகழ்பெற்ற சேக்ஸ்பியர் போன்ற பிரபல புத்தக ஆசிரியர்கள் பிறந்த மற்றும் மறைந்த தினத்தை நினைவு கூறும் வகையிலும் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநில் செயற்குழு உறுப்பினர்  புத்தக பதிப்புரிமையையும் நினைவுபடுத்தும் வகையிலும் கொண்டாடப்படுகிறது.

படிப்பின் அவசியத்தையும் தொடர்ந்து படிக்கவேண்டும் என்பதை பற்றியும் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக உலக புத்தக தினம் கொண்டாடப்படுகின்றது. இந்த புத்தக தினத்தின் எழுத்தாளர் புத்தத்தை அவளியிடுவது மகிழ்ச்சியளிக்கின்றது. சொல்லேர் புத்தகம் அனைவ ரும் படிக்க வேண்டிய ஒரு சிறந்த புத்தகம் ஒரு வார்த்தையில் எத்தனை பொருட்கள் புதைந் துள்ளது என்பதை மஜகச்சிறப்பாக விளக்கிக் கூறியுள்ளனர்.

புத்தக ஆசிரியர் அண்டனூர் சுரா எவ்வளவு தீவிரமாக படிக்கக் கூடியவர் என்பதை இந்த புத்தகத்தை படிப்பதன் மூலம் உணரலாம். ஏராளமான மேற்கோள்கள் மற்றும் ஆதாரங்க ளுடன் இந்த புத்தகம்எழுதப்பட்டுள்ளது. அனைவரும் இந்த புத்தகத்தை அவசியம் படிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். இன்றைக்கு தேவை அறிவார்ந்த சமுதாயம், அறிவார்ந்த சமுதாயத்தின் அடிப்படை வாசித்தல் எனவே நாம் அனைவரும் தொடர்ச்சியாக வாசிப்பதை யும் வாசிப்பின் அவசியத்தை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதையும் இந்த உலக புத்தக தினத்தில் உறுதி கொள்ள வேண்டுமென்றார்.

எல்.பிரபாகரன், எ.மணவாளன், வாசகர்பேரவையின் செயலாளர் பேராசிரியர் எஸ்.விஸ்வநா தன் ஆகியோர் நூல்களை பெற்றுக்கொண்டு நூலைப்பற்றியும் ஆசிரியர் பற்றியும் அறிமுகப் படுத்தி பேசினார்கள். நேரு யுவகேந்திராவின் கணக்காளர் ஆர்.நமச்சிவாயம் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாவட்ட துணைத்தலைவர் எம்.குமரேசன் ஆகியோர் கருத்துரை வழங்கினார்கள். 

மத்திய மண்டல பொருப்பாளர் எம்.வீரமுத்து அனைவரையும் வரவேற்றார். நிறைவாக தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாவட்ட பொருளாளர் இ.பவுனம்மாள்  நன்றி கூறினார்.


Top