logo
தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கால், ஈரோடு,மாட்டு சந்தைக்கு மாடுகள் குறைந்தது விற்பனையும் சரிந்தது

தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கால், ஈரோடு,மாட்டு சந்தைக்கு மாடுகள் குறைந்தது விற்பனையும் சரிந்தது

22/Apr/2021 07:32:44

ஈரோடு, கருங்கல்பாளையத்ம் மாட்டு சந்தைக்கு  ஈரோடு, கரூர், நாமக்கல், திருச்சி, திண்டுக்கல் மாவட்டங்களில் இருந்து விவசாயிகள், வியாபாரிகள் மாடுகளை விற்பனைக்காக கொண்டு வந்தனர்.

தமிழகத்தில் இரவு, 10:00 மணி முதல் அதிகாலை, 4:00 மணி வரை இரவு நேர ஊரடங்கு நிலவுவதால், கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, மஹராஷ்டிரா போன்ற மாநில வியாபாரிகள் அதிகளவில் வரவில்லை. மாட்டு சந்தை  வியாழக்கிழமை காலை 5 மணிக்கு பின்னரே கூடியது. தென் மாவட்டம், மலைப்பகுதி மாடுகள் கொண்டு வரப்படவில்லை.

இதுபற்றி, மாட்டு சந்தை உதவி மேலாளர் ராஜேந்திரன் கூறியதாவது: கொரோனா தொற்று அச்சம், பாஸ், ஊரடங்கு போன்ற காரணங்களால், வெளி மாநில வியாபாரிகள் மிகக்குறைவாகவே வந்திருந்தனர். இதில், பசு மாடு  350, எருமை மாடு 100, கன்றுக்குட்டி 50 என, 500 மாடுகள்  கொண்டு வரப்பட்டிருந்தன

வழக்கமாக, 800 முதல், 900 மாடுகள் வரத்தாகும். வழக்கமாக அதிகாலை, 4 மணி முதல் 10 மணிக்குள் மாடுகள் விற்பனையாகும்ஆனால்  பிற்பகல்  2 மணி வரையில் சந்தை நடந்தது. வெளிமாநில வியாபாரிகள் குறைவாக வந்ததால், 40 சதவீத மாடுகளே விற்பனையானது. விற்பனையாகாத மாடுகளை, அதன் உரிமையாளர்கள் வேனில் ஏற்றி ஊருக்கு திருப்பி அழைத்து சென்றனர் என்றார் அவர்.

Top