logo
ஈரோடு மாவட்டத்தில் இதுவரை 4.67 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை:சுகாதார துறையினர் தகவல்

ஈரோடு மாவட்டத்தில் இதுவரை 4.67 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை:சுகாதார துறையினர் தகவல்

21/Apr/2021 06:11:47

ஈரோடு, ஏப்: ஈரோடு மாவட்டத்தில் இதுவரை 4.67 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாக சுகாதார துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.

ஈரோடு மாவட்டத்தில் தற்போது கொரோனா தாக்கம் வேகம் எடுத்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் சுகாதாரத் துறையுடன் இணைந்து பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

ஈரோட்டில் கடந்த வருடம் தொற்று உச்சத்தில் இருந்தபோது தினமும் 2,000 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் உடனுக்குடன் கண்டறியப்பட்டு அவர்களுக்கு தேவையான சிகிச்சை அளிக்கப்பட்டது. இதையடுத்து மாவட்டத்தில் கொரோனா தாக்கம் குறையத் தொடங்கியதும் பரிசோத னைகளும் குறையத் தொடங்கியது.

தற்போது மீண்டும் கொரோனா வேகமெடுத்து உள்ளதால் தினசரி பரிசோதனை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி தற்போது நாளொன்றுக்கு 2500-க்கும் மேற்பட்ட கொரோ னா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனால் தொற்று ஏற்பட்ட வர்கள் உடனுக்குடன் கண்டறியப்பட்டு அவர்களின் நோய் தன்மைக்கு ஏற்ப சிகிச்சை அளிக்கப் பட்டு வருகிறது. 

ஈரோட்டில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் சில குறிப்பிட்ட தனியார்  மருத்துவமனைகளில்  கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

நேற்று முன்தினம் வரை மாவட்டம் முழுவதும் இதுவரை 4 லட்சத்து 67 ஆயிரத்து 498 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு உள்ளது. இதில் நேற்று முன்தினம் மட்டும் ஒரே நாளில் 2739 பேருக்கு பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. தற்போது தொற்று அதிகரித்து வருவதால் மேலும் பரிசோதனைகள் அதிகரிக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Top