logo
ஈரோடு மாநகராட்சி பகுதியில்  முககவசம் அணியாமல் வந்தவர்களிடம் இதுவரை ரூ.9 லட்சம் அபராதம் வசூல்

ஈரோடு மாநகராட்சி பகுதியில் முககவசம் அணியாமல் வந்தவர்களிடம் இதுவரை ரூ.9 லட்சம் அபராதம் வசூல்

21/Apr/2021 05:33:55

ஈரோடு. ஏப்: ஈரோடு மாநகராட்சி பகுதியில்  முககவசம் அணியாமல் வந்தவர்களிடம் இதுவரை ரூ.9 லட்சம் அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளதாக மாநகராட்சி ஆணையர் மா. இளங்கோவன் தெரிவித்தார்.

ஈரோடு மாவட்டத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது இதை தடுக்க மாவட்ட நிர்வாகம் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது குறிப்பாக பொதுமக்கள் அனைவரும் கட்டாயமாக முககவசம் அணிய வேண்டும் என்றும் முக கவசம் அணியாமல் பொது இடங்க ளில் செல்பவர்களுக்கு தலா ரூ. 200 அபராதம் விதிக்கப்படும் என்றும் உத்தரவிடப்பட்டுள் ளது.

 அதன்படி, ஈரோடு மாநகராட்சி ஆணையாளர் மா. இளங்கோவன் உத்தரவின்பேரில் அதிகாரிகள் பல்வேறு இடங்களில் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.  ஈரோடு, பெருந்துறை சாலை, திருநகர் காலனி, நாச்சியப்பா வீதி, பேருந்து  நிலையம் உள்ளிட்ட பல்வேறு  இடங்களில் அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள். 

அப்போது முக கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதித்து வருகின்றனர். மாநகராட்சி அலுவலர்கள்,உயர் போலீஸ் அதிகாரிகள், சுகாதார துறையினர் ஒருங்கிணைந்து முக கவசம் அணியாமல் வருபவர்களுக்கு அபராதம் விதித்து வருகின்றனர். மாநகர் பகுதியில் தினமும் 100க்கும் மேற்பட்டவர்களுக்கு அபராதம் விதித்து வருகின்றனர். தற்போது முக கவசம் அணிந்து வருபவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இதுகுறித்து மாநகராட்சி ஆணையாளர் மா. இளங்கோவன் கூறியதாவது:

ஈரோடு மாநகராட்சி பகுதியில்  தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக எடுக்கபட்டு வருகிறது. பொதுமக்கள் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும். தனிநபர் இடைவெளியை கடைப் பிடிக்க வேண்டும் போன்ற விதிமுறைகள் அறிவுறுத்தப் பட்டுள்ளது இந்த விதிமுறைகளை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

 ஈரோடு மாநகராட்சியில் கடந்த ஜனவரி மாதம் முதல் முக கவசம் அணியாமல் வந்தவர் களிடம் தற்போது வரை ரூ. 9 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது புதிதாக தொற்று ஏற்பட்டவர்கள் ஈரோடு மாநகராட்சி திருமண மண்டபத்தில் அமைக்கப் பட்டுள்ள ஸ்கிரீனிங் பரிசோதனை மையத்துக்கு அனுப்பி வைக்கப்படுகிறார்கள் அங்கு நுரையீரல் உள்ளிட்ட 5 வகையான பரிசோதனை செய்யப்பட்டு தொற்றின்  தீவிரம் கண்டறியப்படுகிறது. 

 பின்னர் டாக்டரின் ஆலோசனையின்படி அவர்கள் பெருந்துறையில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு  அனுப்பி வைக்கப்படுகின்றனர்.தொற்று பாதிப்பு குறைவாக இருந்தால் வீட்டு தனிமையில் வைத்து கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள். தனிமையில் இருப்பதற்கான வசதிகள் இல்லாதவர்களுக்கு கொங்கு கலை அறிவியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக சிறப்பு சிகிச்சை மையத்திற்கு அனுப்பி வைக்கப்படுகி றார்கள்.

ஒரே தெருவில் மூன்று குடும்பங்களுக்கு மேல்  தொற்று ஏற்பட்டால் அந்தப் பகுதி கட்டுப் பாட்டுப் பகுதியாக அறிவிக்கப் படுகிறது. ஆனால் மாநகராட்சியில் சேக்கிழார் வீதி மட்டும் தற்போது கட்டுப்பாட்டுப் பகுதியாக உள்ளது மேலும் மாநகராட் சியில் பல்வேறு இடங்களில் பரவலாக தொற்று ஏற்பட்டு வருகிறது. நேற்று இரவு நேற்று மாநகராட்சி பகுதியில் 69 பேருக் கு தொற்று ஏற்பட்டுள்ளது என்றார் அவர்.

Top