logo
டிச.23-இல் புதுக்கோட்டை மாவட்டத்தில்  தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்: ஆட்சியர் பி.உமாமகேஸ்வரி தகவல்

டிச.23-இல் புதுக்கோட்டை மாவட்டத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்: ஆட்சியர் பி.உமாமகேஸ்வரி தகவல்

19/Dec/2020 05:54:18

புதுக்கோட்டை, டிச: புதுக்கோட்டை மாவட்டத்தில்  மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 23.12.2020 (புதன்கிழமை)  நடைபெறவுள்ளது.

 இதுகுறித்து  மாவட்ட ஆட்சியர் பி.உமாமகேஸ்வரி வெளியிட்ட தகவல்:புதுக்கோட்டை மாவட்டத்தில் படித்து வேலைவாய்ப்பு தேடும் இளைஞர்களுக்கு தனியார் துறைகளில் பணியமர்த்தம் செய்யும் நோக்கத்தோடு புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், புதுக்கோட்டை மற்றும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தின் சார்பில் மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்  நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கரின்  தலைமையில் புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் தாலுகாவில் உள்ள மதர்தெரசா பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் ஏற்கெனவே 19.11.2020 மற்றும் 20.11.2020 ஆகிய இரண்டு நாள்கள் நடைபெற்றது. 

இந்த மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் 100-க்கும் மேற்பட்ட முன்னனி தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டு சுமார் 2,500-க்கும் மேற்பட்ட இளைஞர்களை தங்களது நிறுவனங்களில் பணிபுரிய தேர்வு செய்தது. இதன் பயனாக வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் புதிய வேலைவாய்ப்பை பெற்றனர். இதேபோன்று மீண்டும் ஒரு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமை நடத்த மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கரிடம் இளைஞர்கள் கோரிக்கை வைத்தனர்.

அதன் அடிப்படையில்  அமைச்சர் எடுத்த முயற்சியால் புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் மேட்டுச்சாலையில் உள்ள மதர்தெரசா பொறியியல், தொழில்நுட்பக் கல்லூரியில் வருகிற 23.12.2020 புதன்கிழமை அன்று மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. 

இம்முகாமில் தொழில்துறை, சேவைத்துறை, விற்பனைத்துறைகளை போன்ற பல்வேறு துறைகளைச் சார்ந்த 50-க்கும் மேற்ப்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் தகுதியுள்ள நபர்களை வேலைக்கு தேர்வு செய்ய உள்ளனர். மேலும் மாவட்டத்தில் உள்ள திறன் பயிற்சி நிறவனங்கள் கலந்து கொண்டு இலவச திறன் பயிற்சிக்கு ஆட்களை தேர்வு செய்ய உள்ளனர். மேலும், உயர்கல்வி, சுயவேலைவாய்ப்பு மற்றும் வங்கி கடன் குறித்து சம்மந்தப்பட்ட துறைகள் அரங்குகள் அமைத்து வழிகாட்டவுள்ளனர். 

இத்தனியார்துறை முகாமில் எட்டாம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு மற்றும் ஐ.டி.ஐ, டிப்ளமோ, பி.இ, நர்சிங் படிப்புகள் போன்ற கல்வித்தகுதியுடைய 18 முதல் 40 வயதுக்குள்பட்ட வேலைநாடும் இளைஞர்கள் மற்றும் மாற்றுத்திறனாளி இளைஞர்களும் தங்களது சுயவிவர குறிப்பு, ஆதார் அட்டை மற்றும் கல்விச்சான்று நகல்களுடன் கலந்து கொண்டு பயன்பெறலாம். மேலும், இத்தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ள வேலைநாடும் இளைஞர்கள் www.tnprivatejobs.tn.gov.in <http://www.tnprivatejobs.tn.gov.in>  என்ற இணையதளம் வாயிலாக முன்பதிவு செய்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இத்தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் ஒரே இடத்தில் பல்வேறு நிறுவனங்களின் நேர்காணலில் கலந்து கொண்டு தாங்கள் விரும்பும் வேலைவாய்ப்பினை பெற இது நல்ல வாய்ப்பு என்பதால்  புதுக்கோட்டை மாவட்ட இளைஞர்கள் இம்முகாமில் கலந்து கொண்டு பயன்பெற வேண்டும். 

Top