logo
புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா தடுப்பு  விதிமுறைகளின் படி  செய்முறைத் தேர்வுகள் நடைபெற்று வருகின்றன:  ஆட்சியர் தகவல்

புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா தடுப்பு விதிமுறைகளின் படி செய்முறைத் தேர்வுகள் நடைபெற்று வருகின்றன: ஆட்சியர் தகவல்

21/Apr/2021 04:56:19


புதுக்கோட்டை, ஏப்:  புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா தடுப்பு  விதிமுறைகளின் படி  தேர்வுகள் நடைபெற்று வருகின்றன என்றார் ஆட்சியர் பி. உமாமகேஸ்வரி.

புதுக்கோட்டை நகராட்சி, சந்தைப்பேட்டை அரசு மகளிர் மேனிலைப்பள்ளியில்  கொரோனா  தடுப்பு வழிமுறைகளை பின்பற்றி நடைபெற்று வரும்  பிளஸ் 2 செய்முறை தேர்வை  நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்த பின்னர் மாவட்ட ஆட்சியர் மேலும் கூறியதாவது: பிளஸ்2 செய்முறை தேர்வுகள் கடந்த  16.4.2021 முதல் 23.4.2021 வரை இரண்டு கட்டங்களாக நடத்தப்பட்டு வருகிறது. 

புதுக்கோட்டை மாவட்டத்தில் நடைபெற்று வரும் பிளஸ் 2 செய்முறை தேர்வுகள் கொரேனா  தடுப்பு வழிமுறைகளைக் கடைப்பிடித்து நடத்தப்படுவது  குறித்து  சந்தைப்பேட்டை அரசு மகளிர் மேனிலைப்பள்ளியில்  ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. 

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 123 பள்ளிகளில் இரண்டு கட்டங்களாக செய்முறைத் தேர்வுகள் நடைபெறுகிறது. இதில்  13,018 மாணவ, மாணவிகள் கலந்துகொள்கின்றனர். 

 தேர்வுக்காக பள்ளிகளுக்கு வரும்  மாணவர்களை ஆசிரியர்கள் தெர்மல் ஸ்கேனர் மூலம் பரிசோதனை செய்து, கிருமி நாசினி வழங்கி, சமூக இடைவெளியுடன் தேர்வு  மையத்திற் குள் அனுமதிக்கப்படுகின்றனர்.

அந்த வகையில்  சமூக இடைவெளியை கடைபிடித்து, முகக்கவசம் அணிந்து மாணவர்கள் தேர்வில் கலந்து கொள்கின்றனர். கொரோனா தடுப்பு வழிமுறைகள் பள்ளிக்கல்வித்துறை யின் மூலம் தீவிரமாக கடைபிடிக்கப்பட்டு வருவது உறுதியாகியுள்ளது. 


மேலும் இரு நாள்களுக்கு முன்னர்  சென்னை பள்ளிக்கல்வி இயக்கக இணை இயக்குநர் புதுக்கோட்டை மாவட்டத்தில் பிளஸ் 2 செய்முறை தேர்வுகள் நடைபெறும் பள்ளிகளை  நேரடியாக  வந்து  கொரோனா தடுப்பு வழிமுறைகள்  கடைப்பிடிக்கப் படுவது குறித்து  ஆய்வு செய்துள்ளார்த. ஆசிரியர் மற்றும் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு கொரோனா தடுப்பு  விதிமுறைகளின் படி  தேர்வுகள் நடைபெற்று வருகின்றன.

 புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் சூழ்நிலையில் பொதுமக்கள் அனைவரும் கொரோனா தொற்றை தடுக்கும் வகையில் முகக்கவசம் அணிதல் மற்றும் சமூக இடைவெளியை கடைபிடித்தல் போன்றவற்றை தவறாது பின்பற்ற வேண்டும் என்றார் ஆட்சியர் பி. உமாமகேஸ்வரி. 

ஆய்வின் போது மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் விஜயலட்சுமி, வருவாய் கோட்டாட்சி யர்  டெய்சிகுமார், நகராட்சி பொறியாளர் ஜீவாசுப்பிரமணியன், வட்டாட்சியர் முருகப்பன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 


Top