27/Aug/2021 10:44:54
புதுக்கோட்டை, ஆக: தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற பொதுச்செயலாளர் மன்றம் நா.சண்முகநாதன் புதுக்கோட்டையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் மேலும் கூறியதாவது: தமிழ்நாடு சட்டமன்றத்தில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, திருவண்ணாமலை அரசுக்கலைக்கல்லூரிக்கு, டாக்டர் கலைஞர் பெயர் சூட்டப்படும் என்று அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இந்த அறிவிப்பினை தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் வரவேற்கிறது.
முத்தமிழ் அறிஞர் , செம்மொழிநாயகர் , கலைஞர் தமிழ்நாட்டிற்கு மட்டுமல்லாது ,இந்திய துணைக் கண்டத்திற்கும், உலகம் முழுதும் பரவி வாழும் தமிழ் மக்களுக்கும்,தமிழ் மொழிக்கும் அளப்பரிய பணிகள், செய்துள்ள உதவிகள் சொல்லி மாளாதவை களாகும்.எழுதி முடிக்க இயலாதவைகளாகும்.
இத்தகுபெருமையும்,சிறப்பும் ஒருங்கே நிறைந்த கலைஞர் பெயரில் தமிழகத்தில் புதிய பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும். எனவே, தமிழ்நாடு முதலமைச்சர் தமிழ்நாட்டில் டாக்டர் கலைஞர் பெயரில் புதிய பல்கலைக்கழகம் அமைத்து ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களின் எதிர்பார்ப்பினை நிறைவேற்றித் தந்திட வேண்டும் என்றார் அவர்.