logo
பெருந்துறை வேட்பாளர் ஜெயக்குமாரை  ஆதரித்து அமைச்சர்கள் செங்கோட்டையன், கருப்பணன் பிரசாரம்

பெருந்துறை வேட்பாளர் ஜெயக்குமாரை ஆதரித்து அமைச்சர்கள் செங்கோட்டையன், கருப்பணன் பிரசாரம்

19/Mar/2021 10:55:14

ஈரோடு, மார்ச்:  ஈரோடு மாவட்டம், பெருந்துறை சட்டமன்ற தொகுதியில் போட்டியிடு்ம் அதிமுக வேட்பாளர் ஜெயக்குமாரை அறிமுகம் செய்து பிரசாரத்தில் ஈடுபட்டனர்.

பெருந்துறை தொகுதிக்குள்பட்ட  செங்கப்பள்ளி பகுதியில் ஊத்துக்குளி ஒன்றிய செயலாளர் ரவிச்சந்திரன் தலைமையிலும் விஜயமங்களம் பகுதியில்  பெருந்துறை ஒன்றிய செயலாளர் விஜயன் என்கிற ராமசாமி தலைமையிலும் நடைபெற்ற  செயல்வீரர்கள்  ஆலோசனைக் கூட்டத்தில்,  பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கருப்பணனன் ஆகியோர் பங்கேற்று  அதிமுக வேட்பாளர் ஜெயக்குமாரை அறிமுகம் செய்து   பேசினர்.

. தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபடவும், முதல்வரின் தேர்தல் அறிக்கையில் வெளியான திட்டங்களை மக்களிடம் எடுத்துச்செல்லவேண்டும் எனவும் இக்கூட்டத்தில் பங்கேற்ற  நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது. பின்னர் சரளை பகுதியில்  அமைக்கப்பட்டுள்ள அதிமுக தேர்தல் பணிமனை அமைச்சர்கள் திறந்து வைத்தனர். இதில் ஆயிரக்கணக்கான அதிமுக  தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.


Top