logo
இரண்டாம் நிலை காவலர் தேர்வு:  எழுத்துத்தேர்வில் வென்றவர்களுக்கு புதுக்கோட்டையில் இலவச உடற்தகுதி  பயிற்சி

இரண்டாம் நிலை காவலர் தேர்வு: எழுத்துத்தேர்வில் வென்றவர்களுக்கு புதுக்கோட்டையில் இலவச உடற்தகுதி பயிற்சி

20/Apr/2021 11:46:14

புதுக்கோட்டை, ஏப்: இரண்டாம் நிலை காவலர்களுக்கான எழுத்துத்தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு இந்தியன் டிரெய்னிங் அகாதெமி சார்பில்  புதுக்கோட்டையில் இலவச உடற்தகுதி காண் பயிற்சி  அளிக்கப்பட்டு வருகிறது. 

                                                                   

 இந்தியன் டிரெய்னிங் அகாதெமி மூலம் 2021 -ஆம் ஆண்டு இரண்டாம் நிலை காவலர் எழுத்துத் தேர்வில் வெற்றி பெற்ற ஆடவர், மகளிருக்கு  உடற்தகுதி காண் தேர்வுக்கான பயிற்சிகள் மாவட்ட விளையாட்டு மற்றும் ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

 முன்னாள் ராணுவ வீரர்களும் இரண்டு பேர் இந்த அகாதெமியில் பயிற்சி பெற்று வருகிறார்கள். உடற்பயிற்ச்சி காலையிலும் மாலையிலும், 100 மீட்டர் 200 மீட்டர் 400 மீட்டர் 1500 மீட்டர் குண்டெறிதல் ,கயிறு ஏறுதல் ,நீளம் தாண்டுதல் உயரம் தாண்டுதல், பந்து எறிதல், ஆகிய பயிற்சிகளில்  மாணவ-மாணவிகள் 120 பேர் கடந்த  7  மாதமாக  ஈடுபட்டு    உடல் தகுதி காண் தேர்வுக்கு  தயாராகி வருகின்றனர். 

 இது குறித்து  இந்தியன் டிரெய்னிங் அகாதெமி பயிற்சியாளரும், புதுக்கோட்டை ஓரியண்டல் சம்ஸ்கிருத வித்யாலயா உயர்நிலைப்பள்ளியின் உடல்கல்வி ஆசிரியருமான முத்துராமலிங் கம் கூறியதாவது:

இங்கு பயிற்சி பெற்றுள்ள மாணவ மாணவிகள்  60 -க்கும் மேற்பட்டோர்  உடல் தகுதிகாண் தேர்வில் வெற்றி பெற்றும் காவல்துறைக்கு செல்வார்கள் என உறுதியாகக்கூறமுடியும்.  இங்கு பயிற்சி பெற்ற  இரண்டு ராணுவ வீரர்களும்  பெற்று காவல்துறை பணியில் சேர்வார்கள்  தொடர்ந்து பத்து வருடமாக இலவசமாக உடற் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும் 100-க்கும் மேற்பட்டோர் காவல்துறையிலும் ராணுவத் திலும் தீயணைப்புத்துறையிலும் பணிபுரிந்து வருகிறார்கள். சென்ற வருடம். காவல்துறை யில்தேர்ச்சி பெற்று  65 பேர் பணியில் சேர்ந்துள்ளனர். அதில் மூன்றாம் பாலினத்தவர் சம்யுக்தா  காவல் துறையில் பணியாற்றுவது குறிப்பிடத்தக்கது என்றார் அவர். 

உடற்கல்வி இயக்குனர்கள், கந்தசாமி, மாமன்னர் கல்லூரி ஜான் பார்த்திபன், பூங்குடி பாஸ்கரன் ஆகியோர் உடற்பயிற்சி அளித்தனர். அகாதெமி  நிறுவனர் செம்பாட்டூர் அன்புக்கரசி ஏற்பாடுகளை செய்திருந்தார்.                                                 

        


Top