26/May/2021 09:56:41
ஈரோடு மே: ஈரோடு, கொல்லம்பாளையத்தில் உள்ள ஸ்ரீராமர் மடம் சார்பில் வீதிகளில் வசிப்பவர்கள் மற்றும் உடல் நிலை பாதிக்கப்பட்டவர்களின் வீடுகளுக்கும் தினமும் உணவு வழங்கி வருகின்றனர்.
ஈரோடு, கொல்லம்பாளையத்தில் செயல்படும் ஸ்ரீராமர் மடத்தில், ஆன்மிக
பணிகள், சொற்பொழிவு, தினமும், 50 பேருக்கு உணவு
வழங்குதல், வாயில்லா ஜீவன்களுக்கு உணவு வழங்குதல், இறை நுால்கள் வழங்குதல்
போன்ற பணிகளை முகுந்தன் சுவாமிகள் தலைமையில்
செய்து வருகின்றனர்.
கொரோனா பரவல் தடுப்புக்கான ஊரடங்கு அமலாகியுள்ள நிலையில், ஸ்ரீராமர் மடம் மூலம் தினமும், 100 பேருக்கு மேல் உணவு வழங்கி வருகின்றனர். மடத்தின் முன் வீதிகள், ரயில்வே ஸ்டேஷன் போன்ற பகுதிகளில் வசிப்போருக்கு முகுந்தன் சுவாமிகள் தலைமையில் உணவு வழங்கினர்.
மேலும், சென்னிமலை மலைப்பகுதி, கோவில் பகுதியில் வாயில்லா ஜீவன்களுக்கு உணவும், தண்ணீரும் வழங்கினர். ஊரடங்கு நிலை முடிந்து சகஜ நிலை திரும்பும் வரை, உணவு வழங்கும் பணி தொடரும் எனவும் ராமர் மடத்தின் நிர்வாகிகள் தெரிவித்தனர்.