logo
புதுக்கோட்டை மாவட்டத்தில் 6 சட்டமன்றத் தொகுதிகளிலும்  76.32  %  வாக்குகள் பதிவு

புதுக்கோட்டை மாவட்டத்தில் 6 சட்டமன்றத் தொகுதிகளிலும் 76.32 % வாக்குகள் பதிவு

07/Apr/2021 05:46:16

புதுக்கோட்டை, ஏப்ரல்  : புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளிலும்  76.32 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளது.


இது குறித்து மாவட்ட தேர்தல் அலுவலகம் வெளியிட்ட தகவல்: புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை, பதிவான வாக்குகளின் எண்ணிக்கை மற்றும் தொகுதி வாரியாக பதிவான மொத்த வாக்குகளின் சதவிகித விவரம்:


178. கந்தர்வக்கோட்டை (தனி) சட்டப்பேரவைத்தொகுதியில் 1,01,028 ஆண் வாக்காளர்களும், 100,474 பெண் வாக்காளர்களும், 19 மூன்றாம் பாலினத்தவர்களும் என மொத்தம் 2,00,521 வாக்காளர்கள் உள்ளனர்.  அதில்  மொத்தம் 1,48,112 பேர் வாக்களித்துள்ளனர்.  வாக்குப்பதிவு 75.4 %.

179. விராலிமலை சட்டப்பேரவைத்தொகுதியில்,  1,11,066 ஆண் வாக்காளர்களும்,  1,14,307 பெண் வாக்காளர்களும்,  மூன்றாம் பாலினத்தவர்கள் 16 பேர் உள்பட மொத்தம்  2,25,119 வாக்காளர்கள் உள்ளனர்.  அதில்  மொத்தம் 1,92,319 பேர் வாக்களித்துள்ளனர்.  வாக்குப்பதிவு 85.43 %.

180. புதுக்கோட்டை சட்டப்பேரவைத்தொகுதியில், 1,19,273 ஆண் வாக்காளர்களும், 1,24,678 பெண் வாக்காளர்களும்,  மூன்றாம் பாலினத்தவர் 21 பேர் உள்பட மொத்தம் 2,43,972 வாக்காளர்கள் உள்ளனர்.  அதில்  மொத்தம்  1,77,953 பேர் வாக்களித்துள்ளனர்.  வாக்குப்பதிவு  72.94 %.

181. திருமயம் சட்டபபேரவைத்தொகுதியில்,  1,11,295 ஆண் வாக்காளர்களும், 1,16,531 பெண் வாக்காளர்கள் மூன்றாம் பாலினத்தவர் 3 பேர் உள்பட  மொத்தம் 2,27,829 வாக்காளர்கள் உள்ளனர்.  அதில்  மொத்தம் 1,72,899 பேர் வாக்களித்துள்ளனர்.  வாக்குப்பதிவு 75.89 %.

182. ஆலங்குடி சட்டப்பேரவைத் தொகுதியில், 1,07,129 ஆண் வாக்காளர்களும், 1,10,147 பெண் வாக்காளர்களும், 1 மூன்றாம் பாலினத்தவர் 3 பேர்  உள்பட மொத்தம் 2,17,280 வாக்காளர்கள் உள்ளனர்.  அதில்,  மொத்தம் 1,70,434 பேர் வாக்களித்துள்ளனர்.  வாக்குப்பதிவு 78.44 %.

183. அறந்தாங்கி சட்டப்பேரவைத் தொகுதியில், 1,17,434 ஆண் வாக்காளர்களும், 1,19,639 பெண் வாக்காளர்களும்,  மூன்றாம் பாலினத்தவர் 6 பேர் உள்பட மொத்தம் 2,36,981 வாக்காளர்கள் உள்ளனர்.  அதில் மொத்தம்1,66,743 பேர் வாக்களித்தனர்.  வாக்குப்பதிவு 70.37 %.

மாவட்டத்தின் 6 தொகுதிகளில் 6,67,127 ஆண் வாக்காளர்களும், 6,85,776 பெண் வாக்கார்களும், 69 மூன்றாம் பாலினத்தவர்களும் என மொத்தம் 13,52,972 வாக்காளர்கள்  உள்ளனர்.  அதில் ஆண்கள் , பெண்கள் உள்பட மொத்தம் 10,32,588 பேர் வாக்களித்துள்ளனர்.  மொத்த வாக்குப்பதிவு 76.32  %.

 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்  வைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்தில் மூன்றடுக்கு பாதுகாப்பு:



இது குறித்து புதுக்கோட்டை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும் ஆட்சியருமான பி. உமாமகேஸ்வரி  கூறியதாவது:

மாவட்டத்திலுள்ள 6 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் 76 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. புதுக்கோட்டையில் 346, அறந்தாங்கியில் 343, விராலிமலையில் 310, ஆலங்குடியில் 311, கந்தர்வகோட்டையில் 273, திருமயத்தில் 319 உள்பட மொத்தம் 1902 வாக்குச்சாவடி மையங்களில் அமைக்கப்பட்டிருந்த  3401 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களும், 2331 கட்டுப்பாட்டு கருவிகளும், 2452 விவிபாட் இயந்திரங்களும் வாக்கு எண்ணும் மையம் அமைந்துள்ள புதுக்கோட்டை அரசு மகளிர் கலைக்கல்லூரியில் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டுள்ளன..

 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள ஸ்ட்ராங் ரூம்  மூன்றடுக்கு  போலீஸ் பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளது.  முதல் அடுக்கும் மத்திய துணை ராணுவத் தினரும், இரண்டாவது அடுக்கில் தமிழ்நாடு சிறப்புக்காவல் படையினரும்,  மூன்றாவது அடுக்கில் உள்ளூர் போலீஸாரும் பாதுகாப்புப்பணியில் ஈடுபடுகின்றனர்.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் உள்ள அறையை சிசிடிவி மூலம் 24 மணி நேரமும் கண்காணிக்கப்படும். இதை, தேர்தல் பார்வையாளர்கள்,  தேர்தல் அலுவலர்கள், அரசியல் கட்சிகளின் முகவர்கள் டிஜிட்டல் திரை மூலம் பார்க்க முடியும். தினமும் இரண்டு முறை தேர்தல்  நடத்தும் அலுவலர்களும், ஒரு முறை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும்  நேரில் ஆய்வு செய்வார்கள்.

தேர்தல் நேரத்தில் பெரும்  சவாலாக இருந்த கொரோனா அச்சுறுத்தலை  புதுக்கோட்டை மாவட்ட மக்கள், அரசியல் கட்சியினர், அனைத்துத்துறை அலுவலர்கள் முதல் கடைநிலை ஊழியர்கள் வரை அனைவரது ஒத்துழைப்புடன் சமாளித்து தேர்தலை வெற்றிகரமாக நடத்தி முடிக்க முடிந்தது.

 அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும்  மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் மே.2 -இல் புதுகை அரசு மகளிர் கலைக்கல்லூரியில் அந்தந்தத்தொகுதிகளுக் கென ஒதுக்கப்பட்டுள்ள அறைகளில் எண்ணும் பணி நடைபெறவுள்ளது  என்றார் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் பி. உமாமகேஸ்வரி. 

 

 


Top