14/Apr/2021 06:24:32
சென்னை, ஏப்.14: தினமணி நாளிதழின் ஆசிரியர் கி. வைத்தியநாதனின் தாயார் திருமதி மீனாட்சி கிருஷ்ணன்(89) சென்னை, நொளம்பூரிலுள்ள இல்லத்தில் உடல் நலக் குறைவு காரணமாக புதன்கிழமை காலமானார்.
நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரம் மதுரா கோட்ஸில் (ஹார்வி மில்) மேலாளராகப் பணிபுரிந்த காலஞ்சென்ற வி.எஸ்.ஆர். கிருஷ்ணனின் மனைவி ஆவார். இவருக்கு மகன் தினமணி ஆசிரியர் கி. வைத்தியநாதன், மகள் அஞ்சனிநாதன் ஆகியோர் உள்ளனர்.
இறுதிச் சடங்குகள் புதன்கிழமை மாலை 5 மணியளவில் நடைபெற்றது. இறுதிச்சடங்கில் தினமணி மற்றும் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தின் நிர்வாகிகள், ஆசிரியர் குழுவினர் மற்றும் அனைத்துப்பிரிவின் முக்கிய அலுவலர்கள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.