logo
ஊரடங்கால் வாழ்வாதாரம் பாதிப்பு:  அரசு பள்ளிகளில் குழந்தைகளை  சேர்க்க பெற்றோரிடம் அதிகரித்துள்ள ஆர்வம்

ஊரடங்கால் வாழ்வாதாரம் பாதிப்பு: அரசு பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்க பெற்றோரிடம் அதிகரித்துள்ள ஆர்வம்

29/Jun/2021 10:27:22

ஈரோடு, ஜூன்: ஊரடங்கால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டதால்  பல்வேறு சலுகைகளுடன் இலவசக்கல்வி அளித்துவரும் அரசு பள்ளிகளில் குழந்தைகளை  சேர்க்க பெற்றோர்களிடம் ஆர்வம் அதிகரித்துள்ளதை ஈரோட்டில்  பார்க்க முடிகிறது.

 கொரோனா தாக்கம் காரணமாக பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டு தற்போது ஆன்லைன், கல்வி தொலைக்காட்சி மூலம் மாணவர்களுக்கு பாடம் நடத்தப்படுகிறது. இந்த ஆண்டுக்கான மாண வர் சேர்க்கை மற்ற மாவட்ட பள்ளிகளில் தொடங்கியது. ஆனால் ஈரோடு உப்பட 11 மாவட்டங் களில் பாதிப்பு அதிகம் உள்ளதால் மாணவர் சேர்க்கை நடைபெறாமல் இருந்தது

இந்நிலையில் திங்கள்கிழமை முதல் கூடுதல் தளர்வுகள் அறிவிக்கப்பட்டது. அதன்படி ஈரோடு மாவட்டத்தில் மாணவர் சேர்க்கைக்கு அனுமதி அளிக்கப்பட்டது. முதல் நாளான திங்கள்கிழமை  அரசு பள்ளிகளில் தங்கள்  குழந்தைகளைச் சேர்க்க பெற்றோர்  ஆர்வத்துடன்  திரண்டு வந்திருந் தனர்

குறிப்பாக  சென்ற ஆண்டில் தனியார் பள்ளிகளில்  குழந்தைகளை சேர்த்த  பெரும்பாலான பெற்றோர் நடப்பாண்டில்  கொரோனா முழுமுடக்கம் காரணமாக  நடுத்தர மற்றும் ஏழைகள்  வாழ்வாதாரத்தை இழந்துவிட்டனர் . இதன் காரணமாக  நிகழ் ஆண்டில்  தங்களது குழந்தை களை  பல்வேறு சலுகைகளுடன் இலவசக்கல்வி அளித்து வரும் அரசுப் பள்ளிகளில் சேர்க்க அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்

திங்கள்கிழமை  முதல் மாவட்டத்தில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் ,மாநகராட்சி, நகராட்சி பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தொடங்கியது. ப்ரீ கே.ஜி முதல் பிளஸ்- 2 வரை சேர்க்கை நடைபெறுகிறது. ஈரோடு அரசு மகளிர் மாதிரி பள்ளியில் இந்த ஆண்டு இதுவரை 400 பேர் ஆன்லைனில் விண்ணப்பித்துள்ளனர். மேலும் பலர் நேரடி சேர்க்கைக்கு வந்து செல்வ தாக ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.

 இது குறித்து பள்ளிக்கல்வித்துறையினர் கூறியதாவது: ஓராண்டுக்கும் மேலாக கொரோனாவால் தொழில், வேலையை இழந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கிப்போயுள்ளது. தனியார் பள்ளிகளில் கட்டணம் செலுத்த முடியாத பெற்றோர் அரசு பள்ளியை நாடி வருகின்றனர். அரசு பள்ளிக்கு வரும் அனைத்து மாணவ, மாணவிகளுக்கும்  சேர்க்கப் படுவார்கள்.

 குறிப்பிட்ட வகுப்புகளில் மட்டும் சேர்த்து கொள்ளப்படுவர் என்ற நிபந்தனை எதுவும் இல்லை . அவ்வாறு  எந்த அரசுப் பள்ளியாவது நிபந்தனை விதித்தால் புகார் அளிக்கலாம்ஜூலை 5-ஆம் தேதி முதல் அரசின் 25 சதவீத இட ஒதுக்கீட்டில் தனியார் பள்ளிகளில் சேர மாணவ மாணவிக ளுக்கு விண்ணப்பம் வழங்கப்படும் சேர்க்கைக்கு கால அவகாசம் கிடையாது எனினும் விரை வாக சேர்ந்தால் உரிய பயன் கிடைக்கும்  என்றனர்.

 

Top