logo
புதுக்கோட்டை நகரில்  பெய்த திடீர் மழையால் தணிந்தது வெப்பம்- மகிழ்ச்சியில் மக்கள்

புதுக்கோட்டை நகரில் பெய்த திடீர் மழையால் தணிந்தது வெப்பம்- மகிழ்ச்சியில் மக்கள்

13/Apr/2021 12:15:20

புதுக்கோட்டை, ஏப்: புதுக்கோட்டையில் கடந்த ஒரு மாதகாலமாக வாட்டி வதைத்த வெயிலால் மக்கள் அவதிப்பட்டு வந்த நிலையில் திங்கள்கிழமை பிற்பகலில் சுமார் 30 நிமிடங்ள் பெய்த திடீர் மழையால் வெப்பம் தணிந்து மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் வெப்பச் சலனம் காரணமாக  அடுத்த 24 மணி நேரத்துக்கு மழை பெய்யக்கூடும்  எனவும் சென்னையை பொறுத்தவரையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். புதுக்கோட்டை மாவட்டம் உள்பட ஓரிரு மாவட்டங்களில் அளவில் மழை பெய்யும்   என்று சென்னை வானிலை மையம் அறிவித்திருந்தது. 


எனினும் ஞாயிற்றுக்கிழமை கோடை வெயிலின் தாக்கம் அதிகமாகவே உணரப்பட்டது.  புதுக்கோட்டை நகரில் வெயிலுடன் அனல் காற்றும் வீசியது.  இந்த நிலையில்  திங்கள்கிழ மை  காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. குளிர்ந்த காற்றும் வீசியது. ஆலங்குடி, வடகாடு, கொத்தமங்கலம், சிவகங்கை ஆகிய பகுதிகளில்  காலை வேளையில் மழை பெய்து வருவதாக  தொலைக்காட்சிகளில் செய்தி வெளியானது. ஆனால், புதுக்கோட் டை  நகரில் அதற்கான அறிகுறி இல்லாமல் இருந்தது.

இந்நிலையில், பிற்பகல் சுமார் 2 மணியளவில் வானத்தில்  திரண்ட கருமேகக்கூட்டம்   மழையாக மாறி சுமார் 30 நிமிடங்கள் மழை  பெய்தது. இதன் காரணமாக  சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. கால்வாய் இல்லாத பகுதிகளில் மழை நீர் குளம் போல  தேங்கி நின்றது. குறிப்பாக மின்வாரிய அலுவல வளாகத்தில்  வழக்கம் போல மழை நீர்  தேங்கி நின்றது. இதனால், மின் கட்டணம் செலுத்த வந்தவர்கள் சிரமப்பட நேரிட்டது.

எனினும் கடந்த ஒரு மாத காலமாக  நீடித்து வந்த வெப்பம்  தற்போது பெய்த  திடீர் மழையின் காரணமாக நகரில் குளிர்ந்த சூழல் நிலவியது. இதனால், புதுக்கோட்டைநகர வாசிகள் மகிழ்ச்சியடைந்தனர். மேலும், வெப்பம் தணிந்து குளிர்ந்த காற்று வீசுவது இதமளிப்பதா கவும் பொதுமக்கள் தெரிவித்தனர்.

 


Top