logo
சட்டப்பேரவைத் தேர்தல்...வாக்குப்பதிவுக்காக தயார் நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தின் 6 தொகுதிகள்...

சட்டப்பேரவைத் தேர்தல்...வாக்குப்பதிவுக்காக தயார் நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தின் 6 தொகுதிகள்...

05/Apr/2021 05:07:07

புதுக்கோட்டை, ஏப்.5:  புதுக்கோட்டை மாவட்டத்தில்  ஏப்ரல் 6 -இல் (செவ்வாய்க்கிழமை) நடைபெறும் சட்டப்பேரவைதேர்தல் வாக்குப்பதிவுக்காக மாவட்டத்திலுள்ள 6 தொகுதிகளிலும்   1902 வாக்குச்சாவடிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல்-6-ஆம் தேதி நடைபெறும் நிலையில்,  வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 7 மணிக்கு முடிவடைகிறது.  புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 178.கந்தர்வக்கோட்டை (தனி), 179.விராலிமலை, 180.புதுக்கோட்டை, 181.திருமயம், 182.ஆலங்குடி, 183.அறந்தாங்கி ஆகிய 6 சட்டப்பேரவைத்  தொகுதிகளிலும் 112 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனார்.  

 புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள 6 சட்டமன்ற தொகுதிகளிலும் மொத்தமாக 6,67,127 ஆண் வாக்காளர்களும், 6,85,776 பெண் வாக்காளர்களும், 69 மூன்றாம் பாலினத்தவர்கள் உள்பட மொத்தம் 13 ,52,972 வாக்காளர்கள் பட்டியலில் சோ்க்கப்பட்டுள்ளனர். 

 மேலும், மாவட்டத்திலுள்ள 6 சட்டப்பேரவைத் தொகுதிகளான புதுக்கோட்டையில் 346, அறந்தாங்கியில் 343, விராலிமலையில் 310, ஆலங்குடியில் 311, கந்தர்வகோட்டையில் 273, திருமயத்தில் 319 உள்பட மொத்தம் 1902 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.  வாக்காளர்கள் வாக்களிப்பதற்கு வசதியாக 3401 வாக்குப்பதிவு இயந்திரங்களும், 2331 கட்டுப்பாட்டு கருவிகளும், 2452 விவிபாட் இயந்திரங்களும் தயார்நிலையில் உள்ளன. 


 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பெயர், சின்னம் பொருத்தும் பணி நிறைவடைந்து அந்தந்த தொகுதிகளில் தோ்தல் நடத்தும் அலுவலரின் கட்டுப்பாட்டில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளது.  மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், வாக்குச்சாவடி மையங்களில் பயன்படுத்தப்படும் வாக்குச்சாவடி பொருட்கள் அனைத்தும் திங்கள்கிழமை (5-4-2021) அந்தந்த வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது. வாக்குச்சாவடி மையங்க ளில் 9,128 அரசுப் பணியாளர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

  6 சட்டமன்ற தொகுதிகளில் கண்டறியப்பட்டுள்ள 125  பதற்றமான வாக்குச்சாவடி மையங் களில் நுண்பார்வையாளர்களை நியமித்து வாக்குப்பதிவு தீவிரமாக கண்காணிக் கப்படும்.  மேலும் துணை ராணுவப்படையினர் கூடுதலாக பாதுகாப்பு பணியில் ஈடுபடுவர்.  அனைத்து வாக்குச்சாவடிகளிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.  உள்ளூர் காவல் துறையினருடன் துணை ராணுவப்படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர். 

மேலும் வாக்குப்பதிவு நாளான (6.4.2021) செவ்வாய்க்கிழமை  வாக்குச்சாவடி மையங்கள் முன்பு அரசியல் கட்சியினர் வாக்குச்சீட்டு (பூத்சிலிப்) விநியோகிக்கத் தடை விதிக்கப்பட் டுள்ளது. 

 வாக்குச் சாவடி மையங்களிலிருந்து 200 மீட்டர் தூரம் வரை அரசியல் கட்சிகள் வாக்காளர் களைக் கவரும் வகையில் பிரசாரம் செய்யத்தடை விதிக்கப்பட்டுள்ளது. அறிவுறுத்தப்பட் டுள்ளனர்.  வாக்காளர்கள் வாக்களிக்க வரும் போது தோ்தல் ஆணைத்தால் வழங்கப்பட் டுள்ள வாக்குச்சீட்டு (பூத் சிலிப்) வாக்காளர் அடையாள அட்டை உள்பட தோ்தல் ஆணையத் தால் அங்கீகரிக்கப்பட்ட 11  அடையாள அட்டைகளை ஆவணங்களாகக் கொண்டு வந்து  வாக்களிக்கலாம். வாக்குச் சாவடிகளில் வாக்காளர்களுக்கான அனைத்து அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.  

 மாவட்டத்திலுள்ள 6 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் மாவட்ட தேர்தல் பிரிவின் சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும் அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் பதிவான மின்னணு வாக்குப்பதிவு இயந்தி ரங்கள் மே.2 -இல் புதுகை அரசு மகளிர் கலைக்கல்லூரியில் அந்தந்தத் தொகுதி களுக்கென ஒதுக்கப்பட்டுள்ள அறைகளில் எண்ணும் பணி நடைபெறவுள்ளது.  வாக்கு எண்ணும் மையத்தில் பல அடுக்குப்பாதுகாப்புக்கு  அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. 


Top