logo
மாற்றுத்திறனாளிகள் தினத்தில் புதிய தொழில் நிறுவனத்தை தொடங்கிய மாற்றுத்திறனாளிகள்

மாற்றுத்திறனாளிகள் தினத்தில் புதிய தொழில் நிறுவனத்தை தொடங்கிய மாற்றுத்திறனாளிகள்

04/Dec/2020 06:27:01

ஈரோடு : ஈரோடு  பீனிக்ஸ் மாற்றுத்திறனாளிகள் நலச்சங்கம் மற்றும்  டிசம்பர்-3 இயக்கம்  இணைந்து நடத்திய  சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தையொட்டி  மாற்றுத்திறனாளிகளுக்கான தொழில் நிறுவன தொடக்க விழா நடைபெற்றது.

ஈரோட்டில் தனியார் திருமண மண்டபத்தில் ஈரோடு பீனிக்ஸ் மாற்றுத்திறனாளிகள் நலசங்க தலைவலர் என்.ஜெயப்பிரகாஷ் தலைமையில்  நடைபெற்ற விழாவில், அமிர்தா பால் நிறுவனர்  ஆர்.மோகனசுந்தரம்   சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று பீனிக்ஸ்  அக்ரிகல்சர் புராடாக்ட்ஸ் (பி) லிமிடெட்  என்னும் தொழில் நிறுவனத்தை  துவக்கி வைத்து  வாழ்த்திப் பேசினார். இதையடுத்து,  நிறுவனத்தின் முதல் விற்பனையை .ஈரோடு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலஅலுவலர் சீனிவாசன் தொடங்கி வைத்தார்.

இது குறித்து,  ஈரோடு பீனிக்ஸ்  அக்ரிகல்சர் புராடாக்ட்ஸ் (பி) லிமிடெட் நிறுவனத்தின் பொருப்பாளரும் மாவட்டத் தலைவருமான  என்.ஜெயப்பிரகாஷ்  கூறுகையில், இந்த நிறுவனம்  கோபிசெட்டிபாளையத்தில் இருந்து இயங்கவுள்ளதாகவும், எங்களிடம் தற்போது நாட்டுசர்க்கரை, பூண்டு, முந்திரி போன்ற பொருட்கள் தயாராக இருக்கிறது.

இதில் மாற்றுத்திறனாளிகளுக்கு வேலையும் அத்துடன்  யாரை எதிர்பார்த்து இல்லாமல் எங்களை போன்று இருக்கும் மாற்றுத்திறனாளிகளின் குடும்பத்தை நடத்த  உதவியாக இருக்கும் என்ற இலக்குடன் உறுதியான மனதுடன் நிறுவனத்தை துவங்கியுள்ளோம். இந்நிறுவனத்தின் பொருட்கள் மார்க்கெட்டில் சந்தைபடுத்தும் டீலர்ஷிப்பும் முன்னுரிமை அடிப்படையில் மாற்றுத்திறனாளிகளுக்கே வழங்கவுள்ளதாவும் கூறினார்.

Top