logo
ஈரோடு மாவட்டத்தில் 89,000 குடும்பங்களுக்கு கொரோனா நிவாரணம்: ஈரோடு மேற்கு அ.தி.மு.க. வேட்பாளர் ராமலிங்கம் பேச்சு

ஈரோடு மாவட்டத்தில் 89,000 குடும்பங்களுக்கு கொரோனா நிவாரணம்: ஈரோடு மேற்கு அ.தி.மு.க. வேட்பாளர் ராமலிங்கம் பேச்சு

01/Apr/2021 07:25:07

ஈரோடு, ஏப்ரல்:  ஈரோடு மாவட்டத்தில் 89,000 குடும்பங்களுக்கு கொரோனா நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது என்றார்  ஈரோடு மேற்கு தொகுதி அதிமுக  வேட்பாளர் ராமலிங்கம். 

ஈரோடு மேற்கு தொகுதி அ.தி.மு.க வேட்பாளர் கே.வி.ராமலிங்கம், ஈரோடு, சூரம்பட்டிவலசு, அணைக்கட்டு, மாணிக்கம்பாளையம், நல்லிதோட்டம், ராசாம்பாளையம் பகுதியில் இரட்டை இலை சின்னத்துக்கு  வாக்கு  சேகரித்தார்.

அப்போது வாக்காளர்களிடம், வேட்பாளர் கே.வி.ராமலிங்கம் பேசியதாவது:கடந்த, ஐந்தாண்டில் ஈரோடு மேற்கு தொகுதியில், படித்த ஏழை பெண்களுக்கு, 25,000 ரூபாய் நிதியுதவியுடன், தலா 4 கிராம் தாலிக்கு தங்கம் திட்டத்தில், 1,521 பயனாளிகளுக்கு, 3.80 கோடி நிதி, 3.07 கோடி ரூபாய்க்கு தங்கம் வழங்கப்பட்டுள்ளது. 

பட்டம், பட்டயம் படித்த ஏழை பெண்களுக்கு, 50,000 ரூபாய் நிதியுதவி  4 கிராம் தங்கம் என 1,229 பயனாளிக்கு, 6.14 கோடி ரூபாய் நிதியுதவி, 2.48 கோடிக்கு தங்கம் வழங்கப்பட்டுள் ளது. 


மேலும்,  2,152 மாற்றுத்திறனாளிக்கு தேசிய அடையாள அட்டை, 762 மாற்றுத்திறனாளிக்கு இலவச பஸ் பாஸ், 258 மாற்றுத்திறனாளிக்கு, 3 லட்சம் மதிப்பில் உதவி உபகரணம், 531 மனவளர்ச்சி குன்றியோர், கடும் ஊனம், தொழுநோயாளிக்கு மாதம், 1,500 ரூபாய் வீதம், 9.55 கோடி ரூபாய் பராமரிப்பு உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று காலத்தில் நிவாரண உதவித்தொகை, 89,205 குடும்ப அட்டைதாரர் களுக்கு, 1,000 ரூபாய் வீதம், 8.92 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. இதுபோன்ற திட்டங்கள் தொடர, இரட்டை இலை சின்னத்துக்கு  வாக்களித்து வெற்றி பெற செய்யுங்கள் என்றார் அவர்.

Top