logo
ஈரோடு மாவட்டத்தில்  80 வயது முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் 5,176 பேர் தபால் மூலம் வாக்குப்பதிவு

ஈரோடு மாவட்டத்தில் 80 வயது முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் 5,176 பேர் தபால் மூலம் வாக்குப்பதிவு

01/Apr/2021 07:14:03


ஈரோடு, ஏப்ரல்:  ஈரோடு மாவட்டத்தில்  80 வயது முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் 5,176 பேர் தபால் மூலம் வாக்குப்பதிவு செய்துள்ளனர்.

 தமிழக சட்டமன்ற தேர்தல் வரும்  6-ஆம் தேதி நடைபெற உள்ளது.100 சதவீதம் வாக்குப்பதிவை வலியுறுத்தி தேர்தல் ஆணையம் சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. 80 வயதுக்கு மேற்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள், பாதிப்பு உள்ளதாக சந்தேகப்படும் வாக்காளர்கள் தங்களது வாக்குகளை தபால் மூலம் செலுத்தலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.

 ஈரோடு மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்றத் தொகுதிகளில் 80 வயதுக்கு மேற்பட்டவர்கள் 50 ஆயிரத்து 62 பேரும், மாற்றுத்திறனாளிகள் 14,597 பேரும் உள்ளனர். இதில் 5,435 பேர் தபால்  வாக்களிக்க விருப்பம் தெரிவித்திருந்தனர். 

இவர்களுக்கு தபால் வாக்கு  அளிப்பதற்கான  ஒப்புதல் படிவத்தை இணைத்து தினம் மாவட்ட அளவில் விருப்பம் தெரிவித்த வாக்காளர்களின் வீடுகளுக்கு அதிகாரிகள் நேரடியாக சென்று தபால் வாக்குகளை  பெற்றனர். 

முதற்கட்ட ஓட்டுப்பதிவில் 2,679 பேர் தபால் மூலம் வாக்களித்தனர். இதில்  விடுபட்டவர் களுக்கு அதிகாரிகள் அவர்கள் வீட்டுக்கே சென்று மீண்டும் தபால் வாக்குகளை பதிவு செய்தனர். இந்நிலையில் இன்று மாவட்டத்தில் இரண்டாவது கட்டமாக 80 வயது முதியவர் கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் தபால் மூலம் ஓட்டு பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப் பட்டது. இதன்படி நேற்று 2-வது கட்டமாக காலை 8 மணிக்கு இந்த பணி தொடங்கியது.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்ற தொகுதியிலும் வாக்கு சேகரிக்கும் குழுவினர் வீடு வீடாக சென்று தபால் வாக்குகளை பதிவு செய்தனர்.இந்த பணி  மாலை 5 மணியுடன் நிறைவடைந்தது. பின்னர் வாக்களித்த தபால் பெட்டி பூட்டி பத்திரமாக சீல் வைக்கப்பட்டு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் எடுத்துச் செல்லப்பட்டது.

ஈரோட்டில் இரண்டாவது கட்டமாக 2497 பேர் தபால் வாக்குகளை பதிவு செய்தனர். இதன் மூலம் ஈரோடு மாவட்டத்தில் மொத்தமாக 5,435 பேரில் 5,176 பேர் தபால் மூலம் தங்களது லாக்குகளை  பதிவு செய்துள்ளனர். 

இந்நிலையில், வெள்ளிக்கிழமை ஈரோடு மாவட்டத்தில் பணிபுரியும் போலீசாருக்கு தபால்  மூலம் வாக்களிக்க  ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஈரோடு பவானி கோபி பெருந்துறை ஆகிய நான்கு இடங்களில் ஓட்டு பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நாளை மறுநாள் ஈரோடு மாவட்டத்தில் தேர்தலில் பணிபுரியும் அரசு ஊழியர்கள் ஆசிரியர்களுக்கு மூன்றாவது கட்ட பயிற்சி நடைபெற உள்ளது. இதில் விடுபட்டவர்களுக்கு தபால்  மூலம் வாக்களிக்க  நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Top