logo
ஐ.ஐ.டி,  ஜே.இ.இ, அரசுதேர்வுகளுக்கு டிச.15 -ல் பயிற்சி வகுப்புகள்: அமைச்சர் செங்கோட்டையன் தகவல்

ஐ.ஐ.டி, ஜே.இ.இ, அரசுதேர்வுகளுக்கு டிச.15 -ல் பயிற்சி வகுப்புகள்: அமைச்சர் செங்கோட்டையன் தகவல்

12/Dec/2020 07:12:34

ஈரோடு-டிச: தேசியளவிலானபொறியியல் கல்லூரிகளில் சேருவதற்காக  நடத்தப்படும்  ஐ.ஐ.டி,  ஜே.இ.இ போன்ற மத்திய அரசு தேர்வுகளுக்கும் வரும் செவ்வாய்க்கிழமை (15.12.2020) பயிற்சி அளிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றார் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்  கே.ஏ.செங்கோட்டையன்.

ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம்  பொதுபணியாளர்கள் கூட்டுறவு,சிக்கனம் மற்றும் கடன் சங்கத்தின் நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்ட  அமைச்சர்  கே.ஏ.செங்கோட்டையன் ரூ.5 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கி  பேசியதாவது:மருத்துவப்படிப்பிற்கு 7.5 சதவிகித இட ஒதுக்கீடு என்பது இந்திய  வரலாற்றில் தமிழகத்தில் மட்டும்தான் செயல்படுத்தப்பட்டுள்ளது. நிகழாண்டு அரசுப் பள்ளியில் படித்த 405 மாணவர்கள் மருத்துவ படிப்பிற்கு இடம் கிடைத்திருக்கின்ற சாதனை படைக்கப்பட்டுள்ளது.

 நீட் தேர்வுக்கு இலவச பயிற்சிஅளித்தன் அடிப்படையில் மாணவர்கள் தேர்வாகியுள்ளனர். அவர்கள் தனியார் மருத்துவக் கல்லூரியில் சோர்ந்தாலும் அதற்கான கல்விகட்டணம் முழுவதும் அரசே ஏற்றுள்ளது. அடித்தட்டு மக்களின் குழந்தைகளை சிறந்த கல்வியாளர்களாக இந்த அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. வரும் செவ்வாய்கிழமை (டிச. 15)  முதல் தேசிய அளவிலான பொறியியல் கல்லூரிகளின் சேர்க்கைக்காக  நடத்தப்படும் ஐஐடி,  ஜேஇஇ போன்ற மத்திய அரசு  நுழைவுத் தேர்வுகளுக்கும் பயிற்சிஅளிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வரும் 23-ஆம் தேதி முதல் பட்டயக் கணக்காளர் தேர்வுக்கும் பயிற்சி அளிக்கநடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மாணவர்களின் எதிர்காலம் ஒளிமயமாக திகழச் செய்ய கூடிய வகையில் அது அமையும்.உங்கள் வாழ்வு உங்கள் வளம் அனைத்தும் உங்கள் குழந்தைகளிடமே இருக்கிறது.

குழந்தைகளை சிறந்த கல்வியாளர்களாக உருவாக்குவதற்கு இந்த அரசுபல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது. தமிழக முதல்வர் கல்வித்துறைக்கு சுமார் ரூ. 32,158 கோ டி நிதி ஒதுக்கி  நாடே வியக்கத்தக்க அளவிற்கு கல்வியில்  பல மாற்றங்களைஉருவாக்குவதற்கு அரசுநடவடிக்கை மேற்கொண்டு வருகிறது என்றார் அமைச்சர் செங்கோட்டையன்.                                               

        


Top