logo
ரோட்டரி சங்கங்கள் சார்பில்  அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அமைச்சர் ரகுபதி முன்னிலையில்   உபகரணங்கள்   வழங்கல்

ரோட்டரி சங்கங்கள் சார்பில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அமைச்சர் ரகுபதி முன்னிலையில் உபகரணங்கள் வழங்கல்

07/Jun/2021 06:52:47

புதுக்கோட்டை, ஜூன்:  புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு புதுக்கோட்டை மாவட்ட அனைத்து ரோட்டரி சங்கங்கள் சார்பில் 15 ஆக்சிஜன் செரிவூட்டும் கருவிகளை சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்ட அமைச்சர் எஸ்.ரகுபதி  திங்கள்கிழமை (7.6.2021) வழங்கினார்.

பின்னர்  அமைச்சர் ரகுபதி கூறியதாவது: கோவிட் நோய்த்தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில்  முதல்வர் மேற்கொண்டு வருகிறார். இதனால் தமிழகத்தில் கோவிட் நோய் தொற்று கட்டுப்படுத்தப்பட்டு வருகிறது. கோவிட் நோயாளிகளுக்கு சிறந்த முறையில் சிகிச்சை அளிக்க அரசு மருத்துவமனைகளில் தமிழக அரசு தேவையான அனைத்து வசதிகளையும் ஏற்படுத்தி உள்ளது.

தேபோன்று தனியார் அமைப்புகளும் கோவிட் சிகிச்சைக்கான மருத்துவ உபகரணங்களை  அரசு மருத்துவமனைகளுக்கு தொடர்ந்து வழங்கி வருகின்றன. அதன் அடிப்படையில்புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு புதுக்கோட்டை மாவட்ட அனைத்து ரோட்டரி சங்கங்கள் சார்பில் ரூ.21 லட்சம் மதிப்பிலான 15 ஆக்சிஜன் செரிவூட்டும் கருவிகள் வழங்கப்பட்டுள்ளன. மக்களின் உயிர் காக்கும் வகையில் மருத்துவ உபகரணங்களை வழங்கிய ரோட்டரி சங்கங்களுக்கு  நன்றி தெரிவிக்கிறேன்.

தளர்வுகளுடன் கூடிய தற்போதைய ஊரடங்கு காலத்தில் பொதுமக்கள் அனைவரும் அரசின் கோவிட் தடுப்பு வழிமுறைகளான முகக்கவசம் அணிதல், கை கழுவுதல், சமூக இடைவெளியை கடைபிடித்தல் போன்றவற்றை தவறாது கடைபிடித்து கோவிட் தொற்றிலிருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்றார் அமைச்சர் எஸ்.ரகுபதி தெரிவித்தார்

இந்நிகழ்வில்புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் டாக்டர்.வை.முத்துராஜா,மாவட்ட வருவாய் அலுவலர் பெ.வே.சரவணன், அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் பூவதிவழக்குரைஞர் கே.கே.செல்லப்பாண்டியன்.நைனாமுகமது, ரோட்டரி சங்க மாவட்ட ஆளுநர் .லெ.சொக்கலிங்கம், மாவட்ட பொது செயலாளர் அருணாசலம், கான் அப்துல் கபார்கான்  உள்பட  பலர் கலந்து கொண்டனர்.       

Top