logo
ஈரோட்டில் அரசு ஊழியரிடம் ரூ.2கோடியே 55 லட்சம் மோசடி செய்தவர் கைது

ஈரோட்டில் அரசு ஊழியரிடம் ரூ.2கோடியே 55 லட்சம் மோசடி செய்தவர் கைது

30/Mar/2021 11:32:26

ஈரோடு, மார்ச்: ஈரோட்டில் அரசு ஊழியரிடம் ரூ.2.55 கோடி மோசடி செய்த நபரை  பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்தனர்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம்  புளியம்பட்டி, மீனம் பாளையம் பகுதியை சேர்ந்தவர் கே. எம். கோவிந்தராஜன் (39). இவர் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே சிக்கரசம் பாளையம், பண்ணாரி அம்மன் நகரில் கே. எம் .ஜி டிரெடிங் அகாடமி என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார். அந்த நிறுவனத்தில் முதலீடு செய்பவர்களுக்கு 5 சதவீதம்  வட்டி கொடுப்பதாகவும் முதலீடு ஒப்பந்தம் நிறைவு பெற்றதும் முதலீட்டு பணத்தை முழுவதும் கொடுப்பதாகவும் திட்டம் அறிவிக்கப்பட்டன .இந்த கவர்ச்சி திட்டத்தை நம்பி பலர் முதலீடு செய்துள்ளனர். 

இந்த நிலையில், சேலம் மாவட்டம், ஓமலூர் தாலுகா, முத்துநாயக்கன்பட்டி, ஈஸ்வரன் கோவில் பகுதியை சேர்ந்த ஜெய்கணேஷ் (38) அரசு லேப் டெக்னீசியனாக வேலை செய்யும்  இவர் ஈரோடு மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவில் புகார் மனு  அளித்தாக். .அதில் கே .எம் .ஜி டிரெடிங் அகாடமியில் ரூபாய் 2 கோடியே 55 லட்சம் முதலீடு செய்ததாகவும்அதற்கான வட்டியும் முதலீடும் திருப்பி கொடுக்கப்படவில்லை என்றும் குறிப்பிட்டிருந்தார்.  இது குறித்து ஈரோடு குற்றப்பிரிவு போலீஸார்   நடத்திய விசாரணையில் ஜெய்கணேஷ் கடந்த 2018 -ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் 2019-ஆம் ஆண்டு ஜூன் மாதம் வரை ரூ. 2 கோடி 55 லட்சம் முதலீடு செய்ததை கே .எம். ஜி டிரெடிங் அகாடமி உரிமையாளர் கே.எம் .கோவிந்தராஜன் மோசடி செய்தது தெரியவந்தது.


 தொடர்ந்து அந்நிறுவனத்தின் மீதும் கே. எம். கோவிந்தராஜன் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இந்த நிலையில் கே. எம். கோவிந்தராஜன் ஈரோடு  ஆட்சியர்  அலுவலகம் அருகில்  இருப்பதாக மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.  பொருளாதார குற்றப்பிரிவு துணை கண்காணிப்பாளர் ராஜேஷ் உத்தரவின்படி  ஆய்வாளர்  ஹேமா தலைமையிலான போலீசார்அங்கு விரைந்து சென்று கோவிந்தராஜனை கைது செய்தனர்.தொடர்ந்து கைதானகோவிந்தராஜனை கோவை டான்பிட் கோர்ட்டில் போலீசார் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இதுகுறித்து மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு துணை  கண்காணிப்பாளர் ராஜேஷ் கூறுகையில்,  கே.ஜி.எம் .அகாடமி நிறுவனத்தின் மீது வந்த புகாரை தொடர்ந்து அதன் உரிமையாளரான கோவிந்தராஜன் கைதுசெய்யப்பட்டுள்ளார். இந்த நிறுவனத்தில் பலர் முதலீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. எனவே இந்த மோசடியில் பாதிக்கப்பட்ட நபர்கள் இருந்தால் ஈரோடு மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்தில் வந்து புகார் அளிக்கலாம் மேலும் சந்தேகங்களுக்கு 0424 - 2256700, 9498178566 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்றார் அவர்.

Top