logo
மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத உள் ஒதுக்கீடு: முதல்வரின் நிர்வாகத் திறமைக்கு எடுத்துக்காட்டு: அ்மைச்சர் சி. விஜயபாஸ்கர் தகவல்

மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத உள் ஒதுக்கீடு: முதல்வரின் நிர்வாகத் திறமைக்கு எடுத்துக்காட்டு: அ்மைச்சர் சி. விஜயபாஸ்கர் தகவல்

20/Nov/2020 06:21:44

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்ட அரசுப் பள்ளிகளில் பயின்று 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டின்படி அரசு மருத்துவக் கல்லூரிகளில் பயிலும் வாய்ப்பு பெற்றுள்ள 11 மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் பி. உமமாமகேஸ்வரி தலைமையில் இன்று (20.11.2020) நடைபெற்ற பாராட்டு விழாவில்மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டா; சி.விஜயபாஸ்கர் பங்கேற்று தனது சொந்தப் பொருப்பில் மாணவர்களுக்கு கல்விக்கட்டணத்தை வழங்கிப்  பேசியதாவது.

தமிழகத்திலுள்ள அரசு பள்ளிகளில் படிக்கும் ஏழை மாணவ, மாணவிகளின் மருத்துவக் கனவை நிறைவேற்றும் வகையில் தமிழக முதல்வர்  மருத்துவப் படிப்பில் அரசு பள்ளி மாணவா;களுக்கு 7.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கி சாதனை புரிந்துள்ளார். இதன் பயனாக தமிழகத்தில் அரசு பள்ளியில் பயின்ற மாணவ, மாணவியருக்கு அரசு மருத்தவக் கல்லூரியில் இடம் கிடைத்து அவர்களின் மருத்தவக் கனவு நிறைவேறியுள்ளது. 

இந்த உள் ஒதுக்கீட்டின்படி புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள அரசு பள்ளிகளில் பயின்ற 11 மாணவ, மாணவிகளுக்கு அரசு மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவம் படிக்க இடம் கிடைத்துள்ளது. மருத்துவக் கல்லூரிக்கு தேர்வு பெற்ற மாணவ, மாணவிகளுக்கும் இவர்களுக்கு சிறப்பான முறையில் கற்பித்த ஆசிரியர்களுக்கும் மற்றும் பெற்றோர்களுக்கும் எனது மனமார்ந்த பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். 

இதேபோன்று கீரமங்களம் அரசு மேல்நிலைப்பள்ளியில் படித்த 5 மாணவ, மாணவிகள் மருத்துவக் கல்லூரியில் இடம் பிடித்ததற்கும், புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் பயில உள்ள 3 மாணவர்களுக்கும் எனது மனமார்ந்த பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். 


மேலும், மருத்துவக் கல்லூரி பயில உள்ள இந்த 11 மாணவ, மாணவிகள் சிரமமின்றி கல்வி கற்கும் வகையில் சேர்க்கை கட்டணம் உள்ளிட்ட பிற கட்டணங்களுக்கு சிவிபி அறக்கட்டளை சாh;பில் ஒவ்வொருவருக்கும் தலா ரூ.50,000 வீதம் மொத்தம் ரூ.5.50 லட்சம் மதிப்பில் நிதியுதவித் தொகை வழங்கப்பட்டுள்ளது. இதனை மாணவர்கள் உரிய முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இவர்களுக்கு தேவையான பிற உதவிகளையும் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். 

தமிழகத்தில் அரசு பள்ளி பாடத்திட்டத்தை 41 சதவீதம் பேர் பயின்று வருகின்றனர். இவர்களில்  கடந்த ஆண்டு  6 நபர்களுக்கு மட்டுமே அரசு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்தது. ஆனால், இந்த ஆண்டு கொண்டு வரப்பட்ட 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டினால் எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புகளை சேர்த்து அரசு பள்ளிகளில் பயின்ற 405 நபர்களுக்கு அரசு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்துள்ளது. இதனால் சாதாரண நிலையில் உள்ள மாணவர்களும் மருத்துவம் படிக்க வாய்ப்பாக அமைந்துள்ளது. 

மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவா;களுக்கான 7.5 சதவீத உள் ஒதுக்கீடு  முதல்வரின் நிர்வாகத் திறமைக்கு எடுத்துக்காட்டாகத் திகழ்கிறது. எனவே  மாணவர்கள் இதனை நல்ல முறையில் பயன்படுத்தி சிறந்த முறையில் கல்விக் கற்று பொதுமக்களுக்கு சேவையாற்ற வேண்டும் என்றார் அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர்..

இதில், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் விஜயலெட்சுமி, மாவட்ட ஊராட்சித்தலைவர் ஜெயலெட்சுமி, மாவட்ட கல்வி அலுவலர்கள் திராவிடச்செல்வன், ராஜேந்திரன், சண்முகநாதன், ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவ, மாணவிகள்  உள்பட பலர் கலந்து  கொண்டனர்.


Top