logo
புதுக்கோட்டையில்  ஹோலி பண்டிகை கொண்டாடிய துணை ராணுவப்படையினர்

புதுக்கோட்டையில் ஹோலி பண்டிகை கொண்டாடிய துணை ராணுவப்படையினர்

30/Mar/2021 11:10:30

புதுக்கோட்டை, மார்ச்: புதுக்கோட்டைக்கு தேர்தல் பாதுகாப்பு பணிக்கு வந்துள்ள துணை ராணுவப்படையினருடன்  மாவட்ட ஆட்சியர், மாவட்ட எஸ்பியும் ஹோலி பண்டிகையைக் கொண்டாடி அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தினர்.

தங்களது மாநிலத்தையும், குடும்பத்தையும் விட்டு பிரிந்து தேர்தல் பணிக்காக புதுக்கோட்டைக்கு வந்து உள்ள மத்திய துணை ராணுவப் படையினர் ஹோலிப் பண்டிகை கொண்டாடுவதற்காக  மாவட்ட நிர்வாகம் சார்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.

ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்ற  ஹோலி பண்டிகையில் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான  உமா மகேஸ்வரி மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் ஆகியோர் பங்கேற்று மத்திய துணை ராணுவப் படையினருக்கு  ஹோலி பண்டிகை வாழ்த்துகளை தெரிவித்தனர்.


இதையடுத்து துணை ராணுவப்படையினர் ஒருவருக்கொருவர் மலர்களை தூவி  வர்ண  பொடிகளை பூசிக் கொண்டும் வாழ்த்துகளை பரிமாறிக்கொண்டனர். மேலும் இனிப்புகள் வழங்கி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். 


    

Top