logo
புதுக்கோட்டையில் ஏற்பட்டுள்ள குடிநீர் தட்டுப்பாடு 10 நாள்களுக்குள்  தீர்த்து வைக்கப்படும்: எம்எல்ஏ- முத்துராஜா உறுதி

புதுக்கோட்டையில் ஏற்பட்டுள்ள குடிநீர் தட்டுப்பாடு 10 நாள்களுக்குள் தீர்த்து வைக்கப்படும்: எம்எல்ஏ- முத்துராஜா உறுதி

10/May/2021 10:04:53

புதுக்கோட்டை, மே : புதுக்கோட்டையில் தலைதூக்கியுள்ள குடிநீர் தட்டுப்பாடு 10  நாள்களுக்குள் தீர்த்து வைக்கப்படும் என்றார் புதுக்கோட்டை எம்எல்ஏ- டாக்டர் முத்துராஜா.

புதுக்கோட்டை உழவர் சந்தையில் எம்எல்ஏ  டாக்டர் முத்துராஜா ஆய்வு மேற்கொண்டு விவசாயிகளிடம் குறைகளை கேட்டறிந்தார் அப்போது விவசாயிகள் ஊரடங்கு காலத்தில்  ஒரு நாள் விட்டு ஒரு நாள் தான் வியாபாரம் செய்ய வேண்டும் என்று அதிகாரிகள்  வலியுறுத்துவதாகத் கூறினர். இதையடுத்து, வேளாண் விற்பனை துறை அதிகாரிகளிடம் எம்எல்ஏ புகார்கள் குறித்து  கேட்டறிந்தார்.


இதனைத் தொடர்ந்து கடந்த ஆண்டின் ஊரடங்கு காலத்தில் எப்படி புதிய பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் கடைகள் அமைத்து விவசாயிகள் தாங்கள் விளைவித்த பொருட்களை விற்பனை செய்தார்களோ அதைப் போல தற்போதும் புதிய பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் தற்காலிகமாக கடைகள் அமைக்க மாவட்ட ஆட்சியருடன் பேசி நடவடிக்கை  எடுக்கப்படும்  என்றார்.

இதனைத் தொடர்ந்து, புதுக்கோட்டை நகராட்சி அலுவலகத்திற்கு சென்று அங்கு நகராட்சி பொறியாளர் ஜீவாசுப்பிரமணியன் உள்ளிட்ட அதிகாரிகளிடம் நகராட்சியில் நிலவி வரும்  குடிநீர் பிரச்சினை குறித்து கேட்டறிந்தார் பத்து  நாள்களுக்குள் இரண்டு நாளுக்கு ஒருமுறை குடிநீர் வருவதற் கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகளிடம் கூறினார்.

இதன்பின்னர் ஆணையர் அறையில் தமிழக முதல்வர் மு..ஸ்டாலின் புகைப்படம் இல்லாமலிருந்தது பார்த்த  எம்எல்ஏ- முத்துராஜா  உடனடியாக தனது உதவியாளரிடம் தமிழக முதல்வரின் படத்தை எடுத்து வரச்செய்து ஆணையர் அறையில் வைத்து விட்டுச் சென்றார்.

இதன் பின்னர் செய்தியாளர்களிடம் எம்எல்ஏ-கூறியதாவது: ஒரிரு நாள்களுக்குள்  உழவர் சந்தையில் வியாபாரம் செய்து வரும் விவசாயிகளுக்கு புதிய பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில்  மாற்று இடம்  ஏற்பாடு செய்து தரப்படும் . இதன் மூலம் ஊரடங்கு காலத்தில் தங்கள் வியாபாரத்தை தொடர்ந்து வாழ்வாதாரம்  பாதிக்காத வகையில் ஏற்பாடு செய்யப்படும்.

மேலும், வரும்10 நாள்களுக்குள்  புதுக்கோட்டை நகராட்சியில்  நீடித்து வரும்  குடிநீர் பிரச்னைக்கு தீர்வு காணப்படும்தற்போது 10 நாள்களுக்கு  ஒரு முறை தான் குடிநீர் விநியோகம் நடைபெற்று வருகிறது. இனிமேல் 10  நாள்களுக்குஶ் 2 முறை   குடிநீர் பெறுவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

                                                   

Top