logo
விசைத்தறிக்கு தனி அமைச்சகம் அமைக்க வேண்டும் திமுக தேர்தல் அறிக்கை குழுவிடம் மனு

விசைத்தறிக்கு தனி அமைச்சகம் அமைக்க வேண்டும் திமுக தேர்தல் அறிக்கை குழுவிடம் மனு

04/Nov/2020 06:38:38

ஈரோடு: விசைத்தறிக்கு என்று தனியாக அமைச்சகம் அமைக்க வேண்டும் என்று திமுக தேர்தல் அறிக்கை குழுவிடம் விசைத்தறியாளர்கள் இன்று(4.11.2020) மனு அளித்தனர்.

சட்டமன்ற தேர்தலையொட்டி திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பதற்கான குழு கட்சியின் பொருளாளர் டி.ஆர். பாலு தலைமையில் அமைக்கப்பட்டுள்ளது. ஈரோட்டுக்கு இன்று வந்த அக்குழுவினர் பல்வேறு அமைப்புகளிடம் மனுக்களை பெற்றனர். தமிழ்நாடு விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் தலைவர் சுரேஷ், செயலாளர் வேலுச்சாமி, பொருளாளர் பாலசுப்பிரமணியம், செய்தி தொடர்பாளர் கந்தவேல் ஆகியோர் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:

 விசைத்தறி கூடங்களில் மாதம் ஒரு முறை மின் கணக்கீடு செய்ய வேணடும், விசைத்தறிக்கு என தனியாக அமைச்சகம் அமைக்க வேண்டும், மத்திய அரசு கொண்டு வரும் புதிய மின் திட்டத்தில் விலக்கு அளிக்க வேண்டும், விசைத்தறியாளர்கள் பெற்றுள்ள ரூ.65 கோடி வங்கி மூலதன கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும்.

 விசைத்தறிக்கான தனி ரக ஒதுக்கிடு செய்ய வேண்டும், ஆண்டு முழுவதும் இலவச வேட்டி, சேலை மற்றும் இலவச பள்ளி சீருடை உற்பத்தி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும், விசைத்தறியளர்களுக்கு கூட்டுறவு சங்கங்களின் மூலம் கடன் உதவி வழங்க வேண்டும், இலவச வேட்டி சேலைக்கு கூலி உயர்வு வழங்க வேண்டும் உள்ளிட்ட 14 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றிக்கொடுக்க வேண்டும் என்று மனுவில் கூறப்பட்டுள்ளது. 


Top