logo
கொரோனா விழிப்புணர்வுக்காக கோபியில் தொடர்ந்து 1மணி நேரம் சிலம்பம் சுற்றி மாணவ மாணவியர் சாதனை…

கொரோனா விழிப்புணர்வுக்காக கோபியில் தொடர்ந்து 1மணி நேரம் சிலம்பம் சுற்றி மாணவ மாணவியர் சாதனை…

19/Apr/2021 07:17:33

ஈரோடு ஏப்: ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் தனியார் மகளிர் கலைக்கல்லூரிஈரோடு சிலம்பம் கமிட்டி மற்றும் நோபல் உலக சாதனை நிறுவனத்துடன் இணைந்து கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாணவ மாணவிகள் 100-க்கும் மேற்பட்டவர்கள் தொடர்ந்து ஒரு மணிநேரம் சிலம்பம் சுற்றி சாதனை புரிந்தனர்.

 உலகையே அச்சுறுத்திவரும் கொரோனா நோய் தொற்று இந்தியாவிலும் தமிழகத்திலும் அதிகளவு பரவி வருகிறது. அதனால் கொரோனா நோய் குறித்தும் அதனை தடுக்கும் வழிமுறைகள் குறித்தும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்வுகளை அனைத்து தரப்பு அமைப்புகளும் நடத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் தனியார் மகளிர் கலைக்கல்லூரியுடன் இணைந்து ஈரோடு சிலம்பம் கமிட்டி மற்றும் நோபல் சாதனை புத்தக நிறுவனம் நடத்திய கொரோனா விழிப்புணர்வுக்காக தொடர்ந்து சிலம்பம் சுற்றும் போட்டி நடைபெற்றது.

இதில் ஈரோடு மாவட்டத்தில் உள்ள சிலம்ப மாணவ மாணவிகள் 100-க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்று தொடர்ந்து ஒரு மணிநேரம் சிலம்பம் சுற்றி சாதனை புரிந்துள்ளனர். இச்சாதனையை நோபல் சாதனை புத்தகத்தின் முகமது செராஜ் அன்சாரி அங்கிகரித்து சான்று வழங்கினார்.

இந்நிகழ்வில் கோபிசெட்டிபாளையம் காவல் துணைக்கண்காணிப்பாளர் செல்வம் ,தனியார் மகளிர் கலைக்கல்லூரி ஜெகதா லட்சுமணன், தமிழ்நாடு சிலம்பம் கமிட்டி சந்தோஷ்குமார், தேசிய சிலம்பம் கமிட்டி தியாகு  உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Top