logo
புதுக்கோட்டை நகராட்சிபகுதியில்அதிமுக வேட்பாளர் வி.ஆர். கார்த்திக்தொண்டைமான்  பிரசாரம்

புதுக்கோட்டை நகராட்சிபகுதியில்அதிமுக வேட்பாளர் வி.ஆர். கார்த்திக்தொண்டைமான் பிரசாரம்

25/Mar/2021 10:00:30

புதுக்கோட்டை தொகுதியின் அதிமுக வேட்பாளர் வீ.ஆர். கார்த்திக்தொண்டைமான் புதுக்கோட்டை நகராட்சிப்பகுதியில் வியாழக்கிழமை பிரசாரத்தில் ஈடுபட்டு வாக்கு சேகரித்தார்.

புதுக்கோட்டை தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் வீ.ஆர்.கார்த்திக் தொண்டைமான் நரிமேடு பகுதியில் காலையில் தனது பிரசாரத்தை தொடங்கினார். தொடர்ந்து மச்சுவாடி, காமராஜபுரம், கோவில்பட்டி, அடப்பன்வயல் உள்பட 15 வார்டுகளில் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து வாக்கு சேகரித்து பேசுகையில்,  எனக்கு மக்கள்தான் சொத்து. அவர்களது அன்பால்தான் அரசியலுக்கு  வந்தேன். எனக்கு பொய் பேசத்தெரியாது. மக்களுக்காக உண்மையான பிரதிநிதியாகவே கடந்த காலங்களில் பணியாற்றினேன். எனினும் கடந்த 2016 தேர்தலில் நான் வெற்றி வாய்ப்பை இழந்தேன். இந்தத்தேர்தலில் மக்களை நம்பி மீண்டும் போட்டியிடுகிறேன். என்னை வெற்றி பெறச்செய்ய வேண்டும்  என்றார். 

.இதில், முன்னாள் அமைச்சர்  ந. சுப்பிரமணியன், நகரச்செயலர் க. பாஸ்கர், முன்னாள் நகர்மன்றத்தலைவர் ரா. ராஜசேகரன், நகர் வங்கித்தலைவர் மாரிமுத்து, நிர்வாகிகள் கே. ராமதாஸ்,  ஜீவாசெல்வராஜ் உள்பட திரளானோர் கலந்து கொண்டு வேட்பாளர் வீ.ஆர். கார்த்திக் தொண்டைமானை ஆதரித்து தமிழக அரசின் நலத்திட்டங்களை எடுத்துக் கூறி  வாக்கு சேகரித்தனர்.


Top