logo
புதுக்கோட்டை அரசு அருங்காட்சியகத்தில் இந்தியாவின் 75-ஆவது சுதந்திர தின விழா: சுதந்திர போராட்ட வீரர்கள் கண்காட்சி

புதுக்கோட்டை அரசு அருங்காட்சியகத்தில் இந்தியாவின் 75-ஆவது சுதந்திர தின விழா: சுதந்திர போராட்ட வீரர்கள் கண்காட்சி

23/Mar/2021 11:14:10

புதுக்கோட்டை, மார்ச்: புதுக்கோட்டை அரசு அருங்காட்சியகத்தில் சுதந்திர இந்தியாவின் 75-ஆவது சுதந்திர தின விழா,   அஞ்சல்  தலை   சுதந்திர போராட்டவீரர்கள் புகைப்படக்  கண்காட்சி நடைபெற்றது.


 சுதந்திர இந்தியாவின் 75-ஆவது சுதந்திர தினத்தையொட்டி பாரத பிரதமர் அம்ரித் மகோத்சவ் என்ற பெயரில் நாடு முழுவதும் 75 இடங்களில் 75 வாரங்களுக்கு கொண்டாட் டங்கள் நாட்டின் விடுதலை போராட்டத்தை பிரதிபலிப்பதாக அமைவதுடன், விடுதலை போராட்ட வீரர்களுக்கு மரியாதை செலுத்துவதாக இருக்க வேண்டும்.130 கோடி மக்களின் உதவி மற்றும் ஒத்துழைப்புடன், நாட்டின் எண்ணங்களை வெளிப்படுத்துவதாக கொண்டாட்டங்கள் இருக்க வேண்டும்.

இந்த கொண்டாட்டங்கள், விடுதலைப் போராட்டம், 75-ஆவது ஆண்டில் நமது சிந்தனைகள், கடந்த 75 ஆண்டுகால சாதனைகள், 75-ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் மற்றும் உறுதிப்பாடுகள் என ஐந்து துணைத் தலைப்புகளாக கொண்டாடப்பட வேண்டும் என்று இந்திய பிரதமர் கேட்டுக்கொண்டுள்ளார்.

அதன் அடிப்படையில்  புதுக்கோட்டை அருங்காட்சியகத்தில் அஞ்சல் தலையில் சுதந்திர போராட்ட வீரர்கள் தபால் தலை கண்காட்சி  மார்ச்23 மற்றும்  24 ஆகிய இருநாட்களில்  ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

அஞ்சல் தலை கண்காட்சியி னை அரசு அருங்காட்சியக காப்பாட்சியர்     சி .பக்கிரிசாமி திறந்து வைத்தார். நாணயவியல் கழக தலைவர் சே.தா.பசீர்அலி விளக்கவுரையாற்றினார் .சுதந்திரப் பயிர்க்கு உயிர் தந்தவர்கள் அண்ணல்காந்தியடிகள் , திலகர் , நேதாஜி  மோதிலால் நேரு ,வீரபாண்டிய கட்டபொம்மன், வீரன் சுந்தரலிங்கம், மருது பாண்டியர்,  வ.உ.சிதம்பரம் பிள்ளை, வ.வெ.சுப்பிரமணிய ஐயர், மகாகவி சுப்பிரமணிய பாரதியார் சுபாஸ் சந்திரபோஸ்,உள்ளிட்டவர்களின் தபால் தலை கண்காட்சியில்  இடம்பெற்றிருந்தது. கண்காட்சியினை  மாணவ,மாணவிகள் சமூகஆர்வலர்கள் பார்வையிட்டனர் ஏற்பாடுகளை  அரசு அருங்காட்சியக பணியாளர்கள் செய்தனர்.

 


Top