logo
புதுக்கோட்டையில் திமுக- காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தங்கபாலு பிரசாரம்

புதுக்கோட்டையில் திமுக- காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தங்கபாலு பிரசாரம்

23/Mar/2021 03:03:12

புதுக்கோட்டை ,மார்ச்: புதுக்கோட்டை மாவட்டத்தில் திமுக-காங்கிரஸ் கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து  தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர்  கே.வி.தங்கபாலு  பிரசாரம் செய்தார். 

புதுக்கோட்டை நகராட்சியில்  காமராஜபாத்தில் புதுக்கோட்டை திமுக வேட் பாளர் டாக்டர் வை.முத்துராஜாவை ஆதரித்து   பிரசாரம் செய்தார். அவருடன் மாநில காங்கிரஸ் பொதுச்செயலர் ஏ.சந்திரசேகரன்.நகரத் தலைவர் இப்ராகிம்பாபு, திமுக நகர செயலாளர் க.நைனாமுகமது, நிர்வாகிகள் த. சந்திரசேகரன், எம்.லியாகத் அலி, டி.அப்புக்காளை. மற்றும் கூட்டணி கட்சியினர் உடன் சென்றனர்.

இதைத் தொடர்ந்து அறந்தாங்கி தொகுதியின் காங்கிரஸ்  வேட்பாளர் எஸ்.டி, ராமச்சந்திரனை ஆதரித்து திருவாப்பாடி கடைவீதியில்  பிரசாரம் செய்தார். இதில்,   மாவட்டத்த லைவர்கள் ராமசுப்புராம், வி.முருகேசன்,  மாநில விவசாய அணி துணத்தலைவர் செல்வரத்தினம்  திமுக ஒன்றிய செயலர் பொன் கணேசன்  மற்றும் கூட்டணி கட்சியினர் உடன் சென்றனர்

Top