logo
புதுக்கோட்டை தொகுதியின் திமுக வேட்பாளர்  டாக்டர்  வை.முத்துராஜா  இன்று வேட்புமனு தாக்கல் செய்தார்

புதுக்கோட்டை தொகுதியின் திமுக வேட்பாளர் டாக்டர் வை.முத்துராஜா இன்று வேட்புமனு தாக்கல் செய்தார்

17/Mar/2021 05:37:27

புதுக்கோட்டை, மார்ச்: மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் டாக்டர் வை.முத்துராஜா  (17.3.2021) புதன்கிழமை காலை 11 மணியளவில்   புதுக்கோட்டை தொகுதியின் தேர்தல் நடத்தும் அலுவலரும், வருவாய் கோட்டாட்சியருமான டெ.ய்சி குமாரிடம் வைப்பு தொகை செலுத்தி தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். இதையடுத்து வேட்பாளர் உறுதி மொழியை வாசித்தார்.

வேட்பு மனுதாக்கல் நிகழ்வில் புதுக்கோட்டை எம்எல்ஏ- பெரியண்ணன், அரசு வடக்கு மாவட்ட திமுக  பொருப்பாளர் கே.கே. செல்லப்பாண்டியன் மற்றும் நகரச்செயலர் க. நைனா முகமது, கூட்டணி கட்சி நிர்வாகிகள் எம்.என். ராமச்சந்திரன்(சிபிஐ), மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி  நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


Top