16/Mar/2021 10:39:50
புதுக்கோட்டை, மார்ச்: மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் புதுக்கோட்டை தொகுதி திமுக வேட்பாளர்
டாக்டர் வை.முத்துராஜா (17.3.2021) புதன்கிழமை காலை 10 மணியளவில் மாவட்ட திமுக அலுவலகத்தில் கழக நிர்வாகிகள் மற்றும் தோழமை கட்சி தலைவர்களின் வாழ்த்துகளை பெற்றபின் தனது வேட்புமனுவை தாக்கல் செய்கிறார்.
வேட்பு மனுதாக்கல் நிகழ்வில் திமுக மற்றும் தோழமை கட்சிகளின் தலைவர்கள், முன்னணியினர் மாவட்ட திமுக அலுவலகம் வருகை தந்து வாழ்த்தி வெற்றிக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென புதுக்கோட்டை வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் கேகே. செல்லபாண்டியன் தகவல் தெரிவித்துள்ளார்.