logo
புதிய தொழில் தொடங்க, விரிவாக்கம் செய்ய உரிமங்கள் பெற தொழில் நிறுவனங்களுக்கு அழைப்பு

புதிய தொழில் தொடங்க, விரிவாக்கம் செய்ய உரிமங்கள் பெற தொழில் நிறுவனங்களுக்கு அழைப்பு

19/Dec/2020 04:32:17

புதுக்கோட்டை, டிச: புதுக்கோட்டை மாவட்டத்தில் புதிய தொழில் தொடங்க மற்றும் தொழில்களை விரிவாக்கம் செய்ய உரிமங்கள் பெற தொழில் நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் பி.உமாமகேஸ்வரி வெளியிட்ட தகவல்:     தமிழகத்தில் தொழில் தொடங்குவதற்கான அனுமதி வழங்கப்படுவதை எளிமையாக்குவதற்கு தமிழக அரசு சீரிய திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக தொழில் வணிகத் துறை மூலம் ஒருங்கிணைந்த இணைய வழி ஒற்றைச்சாளர தகவு உருவாக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.

 குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு ஏற்ற வகையில் தேவையான மாற்றங்கள் செய்து  https://easybusiness tn.gov.in/msme  என்ற இணைய தள முகவரியில் தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது.

இதன் மூலம் தொழில் முனைவோh;கள் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதாரதுறையினரிடம் இருந்து புதிய உரிமங்கள் மற்றும் புதுப்பித்தல், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையினரி டமிருந்து பெற வேண்டிய தடையில்லா சான்றிதழ், நகர ஊரமைப்பு மனை திட்ட அலுவலகத்தில் இருந்து மனை அல்லது கட்டிட வரைபட அங்கீகாரம், மின் வாரியத்திடமிருந்து பெற வேண்டிய மின் இணைப்பு, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையிடமிருந்து பெற வேண்டிய தடையில்லா சான்று மற்றும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய ஒப்புதல் ஆகியவற்றுக்கான சேவைகளை குறிப்பிட்ட காலகெடுவிற்குள் பெறலாம். 

எனவே, புதுக்கோட்டை மாவட்ட குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் புதிதாக தொழில் தொடங்குவதற்கும், ஏற்கனவே உள்ள தொழில்களை விரிவாக்கம் செய்வதற்கும் உரிமங்கள் பெற மற்றும் புதுப்பிக்க தேவையான அனைத்து ஆவணங்களுடன் https://easybusiness tn.gov.in/msme  என்ற இணைய தள முகவரியில் விண்ணப்பிக்க வேண்டும். இதன் மூலம் விரைவில் அனுமதி பெற்றுத்தர ஒற்றைச்சாளர முறை ஆய்வுக்கூட்டம் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும், இது தொடர்பான விவரங்களை பெற பொது மேலாளர், மாவட்ட தொழில் மையம், புதுக்கோட்டை 622005 என்ற முகவரியில் நேரிலோ அல்லது 04322-221794 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொண்டு பயன்பெறலாம். 

Top