logo
பல்லுயிர் சூழலுக்கு உகந்த பசுமை காடுகள் உருவாக்கம்: பிப்.27-இல்  நடைபெறும்ஆலோசனைக்கூட்டத்துக்கு ஜி.எஸ். தனபதி அழைப்பு

பல்லுயிர் சூழலுக்கு உகந்த பசுமை காடுகள் உருவாக்கம்: பிப்.27-இல் நடைபெறும்ஆலோசனைக்கூட்டத்துக்கு ஜி.எஸ். தனபதி அழைப்பு

25/Feb/2021 06:56:22

புதுக்கோட்டை, பிப்: இது குறித்து சு்ற்றுச்சூழல் ஆர்வலர் இயக்க ஒருங்கிணைப்பாளர், முன்னோடி விவசாயி புதுக்கோட்டை ஜி.எஸ்.தனபதி வெளியிட்ட அறிக்கை:

நமது மாவட்டத்தில் 75,000 ஏக்கர் சமவெளிக்காடுகள் இருந்தும், அதனால் நீர் சேமிப்போ, பல்லுயிர் வாழ் பண்மயச் சூழலோ இல்லை என்பதை நாம் அறிவோம், இதனை மாற்றி மாநிலத்திலேயே நமது மாவட்டத்தில், அதிகமான சமவெளிக்காடுகள், அரசு நிலங்கள் அதிகம் இருந்தும், அவைகளில் தைல மரங்களும், வேலிக்கருவேலும் ஓரின மரப்பயிரான முந்திரியும் மட்டும் உள்ள சூழலை மாற்றி பண்முக பல்லுயிர் சூழலுக்கு உகந்த பசுஞ்சோலைக்காடுகள் உருவாக்க வேண்டிய அவசர அவசியம் குறித்தான நமது அடுத்தகட்ட செயல்பாட்டுக்கான ஆலோசனைக்கூட்டம். வருகிற 27.02.2021- சனிக்கிழமை அன்று மாலை 5 மணி அளவில், புதுக்கோட்டை கம்பன் நகர் மனை எண் 1377-இல் உள்ள எனது இல்லத்தின் அருகில் உள்ள மாடியில் நடைபெறவுள்ளது. இந்த ஆலோசனைக் கூட்டத்துக்கு மாவட்டத்திலுள்ள சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் ள் வருகை தந்து தங்களின் மேலான கருத்துகளையும் ஆலோசனைகளையும் தெரிவிக்கலாம். (தொடர்புக்கு..94435 93339) என அவர் தெரிவித்துள்ளார்


Top